Home One Line P2 ஹாலிவுட்: ஆஸ்கார் விருதுகள் 2020

ஹாலிவுட்: ஆஸ்கார் விருதுகள் 2020

971
0
SHARE
Ad

ஹாலிவுட்: 92 -வது ஆஸ்கார் விருது நிகழ்ச்சி மிகுந்த எதிர்பார்ப்புடன் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு (மலேசிய நேரப்படி இன்று திங்கட்கிழமை காலை 8 மணி ) தொடங்கியது.

எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதுவரையிலும் அதிர்ச்சியான வெற்றியாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

2020 ஆஸ்கார் விருதுகள் இம்முறை தொகுப்பாளர் இல்லாமல் நடத்தப்படுகிறது. ஓரினச்சேர்க்கை குறித்தான தனது டுவிட்டர் பதிவு விமர்சனங்களைத் தொடர்ந்து கேவின் ஹார்ட் இந்த விருது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலிருந்து விளகினார்.

#TamilSchoolmychoice

இதுவரையிலும் வழங்கப்பட்ட விருதுகளின் பட்டியல் கீழே இணைக்கப்பட்டுள்ளன:

சிறந்த உடை அலங்காரம்:
லிட்டல் வூமென்

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு:
ஒன்ஸ் அபன் ஏ டைம் இன் ஹாலிவுட்

சிறந்த குறும்படம்:
டி நெய்பர்ஸ் விண்டோவ்

சிறந்த எடுத்தாளப்பட்ட திரைக்கதை:
தைகா வைதிதி -ஜோஜோ ரேபிட்

சிறந்த அசல் திரைக்கதை:
போங் ஜுன் ஹொ- ஜின் வோன் : பாராசைட்

சிறந்த குறும் கார்ட்டுன் படம்:
ஹேர் லவ்

சிறந்த முழு நீள கார்ட்டுன் படம்:
டோய் ஸ்டோரி 4

படம்: சிறந்த துணை நடிகர் நடிகைக்கான விருதை வென்ற, பிரேட் பிட் (இடம்) மற்றும் லொரென் டெர்ன் (வலம்)

சிறந்த துணை நடிகர்:
பிரேட் பிட்- “ஒன்ஸ் அபன் ஏ டைம் இன் ஹாலிவுட்”

சிறந்த துணை நடிகை:
லோரென் டெர்ன் – “மேரெஜ் ஸ்டோரி”

சிறந்த ஆவணப்படம்:
அமெரிக்கன் பெக்டரி

சிறந்த குறும் ஆவணப்படம்:
லேர்னிங் டு ஸ்டேக்போர்ட் இன் ஏ வார்சோன்

சிறந்த ஒலித்தொகுப்பு:
போர்ட் வெர்சர்ஸ் பெர்ராரி

சிறந்த ஒலிக் கலவை:
1917

சிறந்த ஒளிப்பதிவு:
1917

சிறந்த படத்தொகுப்பு:
போர்ட் வெர்சர்ஸ் பெர்ராரி

சிறந்த சிறப்புக் காட்சிகள்:
1917

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்:
போம்ப்சேல்

சிறந்த அனைத்துலக படம்:
பாராசைட்

சிறந்த இசையமைப்பு :
ஜோக்கர்

சிறந்த பாடல்:
ஐம் கொன்ன லவ் மீ அகாய்ன் (ரோக்கேட்மேன்)

சிறந்த இயக்குனர்:
போங் ஜுன் ஹொ – பாராசைட்

சிறந்த நடிகர்:
ஜோவாகின் பீனிக்ஸ்- “ஜோக்கர்”

சிறந்த நடிகை:
ரெனீ ஜெல்வெகர்- “ஜூடி”

சிறந்த படம்:
பாராசைட்