Home One Line P1 “அன்வாருக்கு செய்து கொடுத்த வாக்குறுதியை துன் மகாதீர் நிறைவேற்ற வேண்டும்!”- வான் அசிசா

“அன்வாருக்கு செய்து கொடுத்த வாக்குறுதியை துன் மகாதீர் நிறைவேற்ற வேண்டும்!”- வான் அசிசா

824
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நாட்டின் தலைமை பொறுப்பை பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைப்பதாக அளித்த வாக்குறுதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று துணை பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

அண்மையில் ஊடகச் சந்திப்பின் போது, மக்களவைத் தன்னை விட அதிக அதிகாரத்தை வைத்திருப்பதாகவும், பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அவருக்கு இருந்ததால் தான் பிரதமரானார் என்பதையும் டாக்டர் மகாதீர் வலியுறுத்தி இருந்தார்.

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பதாக அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவாரா என்று கேட்டபோது, அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.