Home கலை உலகம் மாமனார் ரஜினியும் மருமகன் தனுஷூம் ஒரே மேடையில் விருது பெறுகின்றனர்

மாமனார் ரஜினியும் மருமகன் தனுஷூம் ஒரே மேடையில் விருது பெறுகின்றனர்

667
0
SHARE
Ad

சென்னை : எத்தனையோ விருதுகளைப் பெற்றிருக்கும் ரஜினிகாந்துக்கு நாளை அக்டோபர் 25-ஆம் தேதி மற்றொரு நினைவில் நிற்கும் விருது பெறும் நாளாக அமையவிருக்கிறது.

புதுடில்லியில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. திரையுலகில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு மிகவும் உயர்ந்த விருதாக கருதப்படுவது தாதா சாகேப் பால்கே விருது. இந்திய திரைத்துறையின் தந்தை என்று அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே பெயரில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

2019-ஆம் ஆண்டு இந்த தாதா சாகேப் பால்கே விருதுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் கொரோனா காரணமாக விருது நிகழ்ச்சி நடைபெறாததால் ரஜினிகாந்த் விருதை பெற்றுக் கொள்ளவில்லை.

#TamilSchoolmychoice

நாளை 25-ஆம் தேதி டெல்லியில் நடத்தப்படவிருக்கும் விழா ஒன்றில் தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுகிறது.

இதில் மற்றொரு விசேஷம் என்னவென்றால், அதே நாளில் 2019-ஆம் ஆண்டிற்கான தேசியத் திரைப்பட விருதுகளும் வழங்கப்பட உள்ளன.

அசுரன் படத்தில் மிக சிறப்பாக நடித்ததற்காக நடிகர் தனுஷூக்கு சிறந்த நடிகர் விருதும் வழங்கப்படுகிறது. சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகர் விருதை விஜய் சேதுபதி பெறுகிறார்.

இதன் மூலம் மாமனார் ரஜினிகாந்த் மருமகன் தனுஷ் இருவரும் ஒரே மேடையில் ஒரே நேரத்தில் விருதுகள் பெறும் சிறப்பு சாதனை நாளை அக்டோபர் 25-ஆம் தேதி நிகழ்த்தப்படவிருக்கிறது.