கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட்டை பிரதமராக ஆதரிக்க அனைத்து 26 கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக பெர்சாத்து கட்சித் தகவல் தொடர்புத் தலைவர் ராட்சி ஜிடின் தெரிவித்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு உச்சமன்றக் குழு கூட்டத்தில் மகாதிர் தலைவர் பதவியிலிருந்து விலகுவதை நிராகரிக்க முடிவு செய்துள்ளதாக ராட்சி கூறினார்.
“பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று காலை மாமன்னரை சந்தித்து மகாதீர் பிரதமராக வருவதற்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.”
“தற்போதைய அரசியல் சூழ்நிலையை சமாளிக்க கட்சித் தலைமையை நம்பவும், அமைதியாக இருக்கும்படியும் பெர்சாத்து உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.”
“இது விரைவில் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.