Home One Line P1 மகாதீர் நிதி அமைச்சக அதிகாரிகளை சந்தித்தார், பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்!

மகாதீர் நிதி அமைச்சக அதிகாரிகளை சந்தித்தார், பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்!

657
0
SHARE
Ad
படம்: நன்றி துன் மகாதீர் டுவிட்டர் பக்கம்

கோலாலம்பூர்: பொருளாதாரத் திட்டத் தொகுப்பை அட்டவணைப்படுத்துவது தொடர்பாக இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நிதி அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடன் சந்திப்பை முடித்துள்ளார்.

மலேசியாவின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கும், கொவிட் -19 நோய் தொற்று மற்றும் பிற வெளிப்புற நிச்சயமற்ற தன்மைகளிலிருந்து எழும் பாதகமான விளைவுகளைத் தணிப்பதற்கும் இந்த பொருளாதாரத் தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

படம்: நன்றி துன் மகாதீர் டுவிட்டர் பக்கம்

இந்த முயற்சி விரைவில் அறிவிக்கப்படும் என்று தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மகாதீர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இருப்பினும், ஆரம்பத்தில் நாளை வியாழக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த, இந்த பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத் தொகுப்பு அறிவிப்பின் தேதி குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை.

இந்த திட்டம் முக்கியமாக விமானத்துறை , சில்லறை விற்பனை மற்றும் சுற்றுலாத் துறைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சீனாவின் வுஹானில் இருந்து தோன்றிய கொரொனாவைரஸ் தொற்றுநோய்களால் ஏற்படும் மோசமான விளைவுகளைத் தடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.