Home One Line P1 சரவாக் செரியான் நாடாளுமன்ற உறுப்பினர் பிகேஆர் கட்சிக்குத் தாவினார்

சரவாக் செரியான் நாடாளுமன்ற உறுப்பினர் பிகேஆர் கட்சிக்குத் தாவினார்

606
0
SHARE
Ad

கூச்சிங் – சரவாக் மாநிலத்தின் செரியான் நாடாளுமன்ற உறுப்பினர், ரிச்சர்ட் ரியோட் (படம்) தான் சார்ந்திருக்கும் எஸ்யுபிபி எனப்படும் சரவாக் யுனைடெட் பியூபில்ஸ் பார்ட்டி கட்சியிலிருந்து விலகி பிகேஆர் கட்சியில் இணைந்திருக்கிறார்.

இந்தத் தகவலை பிகேஆர் கட்சியின் தொடர்புக் குழு இயக்குநர் பாஹ்மி பாட்சில் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார்.

ரிச்சர்ட் ரியோட் இதற்கு முன்னர் காபுங்கான் பார்ட்டி சரவாக் என்ற சரவாக் கட்சிகளின் கூட்டணியில் இருந்தவராவார்.

#TamilSchoolmychoice

2013 முதல் 2018 வரை ரிச்சர்ட் ரியோட் மனிதவள அமைச்சராக மத்திய அரசாங்கத்தில் இடம் பெற்றிருந்தார்.

ரிச்சர்ட் ரியோட்டின் கட்சித் தாவலைத் தொடர்ந்து 18 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த காபுங்கான் பார்ட்டி சரவாக்கின் பலம் தற்போது 17 ஆகக் குறைந்திருக்கிறது.