Home 13வது பொதுத் தேர்தல் பொதுத்தேர்தலில் போட்டியிட ஆர்வமில்லாத முக்கிய அமைச்சர்கள்

பொதுத்தேர்தலில் போட்டியிட ஆர்வமில்லாத முக்கிய அமைச்சர்கள்

492
0
SHARE
Ad

Ng-Yen-Yen-MCA---Sliderகோலாலம்பூர், ஏப்ரல் 10-  அனைவரும் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட ஆர்வம் இல்லை என்று சில முக்கிய அமைச்சர்கள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அம்னோ மகளிர் அணி முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ ரபிடா அஸிஸ், கெராக்கான் கட்சித் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் கோ சூ கூன் ஆகியோர் போட்டியிட விரும்பவில்லை என்று மறுத்து விட்டனர்.

அதே வேளை பிரதமர் துறை அமைச்சர் டான்ஸ்ரீ நோர் முகமட் யாக்கோப், சுற்றுலாத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் இங் யென் யென், தகவல் தொலைத் தொடர்பு கலாச்சாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ உத்தாமா ராய்ஸ் யாத்திம் ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்றும் அறியப்படுகிறது.

#TamilSchoolmychoice

மேலும் எரிபொருள் பசுமை தொழில் நுட்பம் நீர்வளத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ பீட்டர் சின் போட்டியிட மாட்டார் என அவரே அறிவித்து விட்டார்.

பாசீர் கூடாங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும் உயர்கல்வி அமைச்சருமான டத்தோஸ்ரீ முகமட் காலிட் நோர்டின் வரும் பொதுத்தேர்தலில் திராம் சட்டமன்றத்  தொகுதியில் போட்டியிடலாம் என்றும் ஜோகூர் மாநிலத்தின் அடுத்த மாநில மந்திரி பெசாராக அவர் நியமிக்கப்படலாம் என்றும் ஆருடங்கள் தெரிவிக்கின்றன.