Home One Line P2 தேவி: பெண் தெய்வங்களை வணங்கும் நாட்டின் அப்பட்டமான நிலையை காட்சிப்படுத்திய குறும்படம்!

தேவி: பெண் தெய்வங்களை வணங்கும் நாட்டின் அப்பட்டமான நிலையை காட்சிப்படுத்திய குறும்படம்!

876
0
SHARE
Ad

புது டில்லி: தற்போது அதிகம் பேசப்படும் 13 நிமிட நீளமுள்ள ‘தேவி’ குறும்படம் மக்களின் இதயத்தை கனமாக்கும் அனுபவமாக அமைந்துள்ளதாக பலர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

பிரியங்கா பானர்ஜி இயக்கத்தில் எலக்ட்ரிக் ஆப்பிள்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்த தேவி குறும்படத்தில் கஜோல், நேஹா துபியா, நீனா குல்கர்னி, ஸ்ருதி ஹாசன், சந்தியா மத்ரே, முக்தா பார்வே, சிவானி ரகுவன்ஷி, ராம ஜோஷி மற்றும் யசஸ்வினி தயா போன்றவர்கள் நடித்துள்ளனர்.

தற்போது யூடியூபில் கிடைக்கும் தேவி குறும்படம், அனைத்து நடிகைகளும் ஓர் அறையில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு காட்சியுடன் தொடங்குகிறது. ஏன், எப்படி அவர்கள் அனைவரும் அங்கு குவிக்கப்பட்டார்கள் என்பது படத்தில் பின்னர் விளக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும் அதன் கரு நம்மை நடுங்க வைக்கும். மிருகத்தனமான பாலியல் துன்புறுத்தல் பிரச்சனையை தேவி நேர்மையாக தூக்கி பிடித்திருப்பதை பார்வையாளர்கள் உணர்வார்கள். கற்பழிப்பு மற்றும் கொடுமை என்ற கருப்பொருளை முழுவதும் உணர்ச்சிகரமாக கையாளும் தேவி, நம் இதயத்தை உடைக்கும் கசப்பான உண்மையுடன் முடிவடைகிறது.

“பெண் தெய்வங்களை வணங்கும் நம் தேசத்தின் அப்பட்டமான யதார்த்தமான நிலையை இப்படம் என்னை கண்ணீரோடும் கோபத்தோடும் விட்டுச் சென்றது” என்று ஒரு டுவிட்டர் பயனர் குறிப்பிட்டுள்ளார்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இக்குறும்படத்தினைக் காணலாம்: