Home One Line P2 உலகின் பெண் இலட்சாதிபதிகள் பட்டியலில் 61 விழுக்காட்டினரை சீனா உருவாக்கி உள்ளது!

உலகின் பெண் இலட்சாதிபதிகள் பட்டியலில் 61 விழுக்காட்டினரை சீனா உருவாக்கி உள்ளது!

686
0
SHARE
Ad
படம்: சீன தொழில்முனைவோர் ஜாங் ஹுஜுவான்

பெய்ஜிங்: இலட்சாதிபதி பெண் தொழில்முனைவோர்களில் 61 விழுக்காட்டினரை சீனா உருவாக்கி உள்ளது. அவர்கள் ஒரு பில்லியனுக்கு அதிகமான சொத்துகளை வைத்திருக்கின்றனர்.

16 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் இலட்சாதிபதி பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக ஹுருன் சமீபத்தில் வெளியிட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹுருன் என்பது உலகின் பணக்காரர்களை பட்டியலிடும் ஓர் அமைப்பு.

#TamilSchoolmychoice

59 வயதான சீன தொழில்முனைவோரான ஜாங் ஹுஜுவான் எந்த அனுபவமும் இல்லாத ஒரு மருந்து நிறுவனத்தைத் தொடங்கினார். இப்போது 106 பில்லியன் யுவான் (சுமார் 15.1 பில்லியன் அமெரிக்க டாலர்) செல்வத்துடன் உலகின் பணக்கார பெண் என்று அறியப்படுகிறார்.

உலகின் 10 பணக்கார பெண்களில் ஒன்பது பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பதையும் இப்பட்டியல் வெளிப்படுத்தியுள்ளது.