Home One Line P2 கொவிட்-19: இந்தியாவில் திரைக்குப் பின்னால் பணிபுரிபவர்களின் நிலை கேள்விக்குறியானது!

கொவிட்-19: இந்தியாவில் திரைக்குப் பின்னால் பணிபுரிபவர்களின் நிலை கேள்விக்குறியானது!

520
0
SHARE
Ad

மும்பை: கொரொனாவைரஸ் தொற்றுநோயை தடுக்கும் முயற்சியில் அனைத்து திரைப்பட படப்பிடிப்புகளும் இடைநிறுத்தப்பட்ட பின்னர், இந்தியாவின் பாலிவுட் திரையுலகின் திரைக்குப் பின்னால் பணிபுரியும் அன்றாட ஊதியம் பெறும் பணியாளர்களின் நிலை கேள்விக்குள்ளாகி உள்ளது.

ஊழியர் சங்கங்களின் கூற்றுப்படி, தினசரி ஊதியத்தில் 500,000-க்கும் மேற்பட்ட பாலிவுட் தொழிலாளர்கள் உள்ளதாகக் கூறியது. பெரும்பாலானவர்கள் கடந்த வியாழக்கிழமை முதல் அடுத்த செவ்வாய்க்கிழமை வரை நாட்டின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறை மூடப்பட்டதால் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்கின்றனர்.

#TamilSchoolmychoice

இந்த முடிவானது இந்திய தயாரிப்பாளர்கள் அமைப்பு, தினசரி ஊதியத்தில் இருப்பவர்களுக்கு நிவாரண நிதியை அறிவிக்க வழிவகுத்தது.

“தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுவது இதுவே முதல் முறை” என்று மேற்கு இந்திய சினிமா ஊழியர்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அசோக் துபே கூறினார்.

“ஒரு தயாரிப்பு நிறுவனம் தொழிலாளர்கள் மத்தியில் விநியோகிக்க 4,000 பொட்டல உணவு வகைகளை எங்களுக்குக் கொடுத்தது” என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் இதுவரையிலும், ஒன்பது பேர் இறந்துள்ளனர். 490-க்கும் மேற்பட்டோர் கொரொனாவைரஸ் நோய்க்கு ஆளாகி உள்ளனர்.

பாலிவுட்டுடன், துயரமும் வறுமையும் அரிதாகவே தொடர்புபடுத்தப்படுகின்றன, ஏனெனில் இந்தத் தொழில் பொதுவாக அதன் பணக்கார மற்றும் பிரபலமான நடிகர்களின் ஆடம்பரமான வாழ்க்கையின் மூலம் மட்டுமே பார்க்கப்படுகிறது.

“நாம் நடிகர்கள் மற்றும் நட்சத்திரங்கள் மீது மிகவும் கவனம் செலுத்துகிறோம். நாம் அவர்களைத் தாண்டிப் பார்க்கவில்லை” என்று திரைப்பட செய்தி வலைத்தளமான பிலிம் கம்பானியன் நிறுவனர் மற்றும் ஆசிரியர் அனுபமா சோப்ரா கூறினார்.

சரியான நேரத்தில் ஊதியம் வழங்குவதற்கான நீண்டகால தீர்வுகள், அல்லது மருத்துவ காப்பீடு போன்ற சலுகைகளை வழங்குவதற்கான திட்டங்கள் தற்போது ஏற்படுத்தப்படாது என்று திரைப்படத் துறைத் தலைவர்கள் தெரிவித்தனர்.