Home One Line P1 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: மஸ்ஜிட் இந்தியா சுற்றியுள்ள பகுதிகள் ஏப்ரல் 28 வரை முழுமையான தடைக்...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: மஸ்ஜிட் இந்தியா சுற்றியுள்ள பகுதிகள் ஏப்ரல் 28 வரை முழுமையான தடைக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்படுகிறது!

486
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) முதல் ஏப்ரல் 28 வரை மஸ்ஜிட் இந்தியா மற்றும் அருகாமையில் உள்ள பிற பகுதிகள் முழுமையான தடைக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்படுவதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான், ஜாலான் லெபோ அம்பாங், ஜாலான் துன் பேராக், ஜாலான் டாங் வாங்கி மற்றும் ஜாலான் முன்ஷி அப்துல்லா, ஜாலான் அம்பாங் மற்றும் ஜாலான் மலாக்கா ஆகிய வளாகங்கள் மூடப்படும்.

#TamilSchoolmychoice

சுமார் 1 கி.மீ சுற்றளவு இந்த முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் பாதிக்கப்பட்டது. மேலும், 10,000- க்கும் மேற்பட்ட மக்களை இப்பகுதி கொண்டுள்ளது. இதில் சிலாங்கூர் மென்ஷன் மற்றும் மலாயன் மென்ஷன் பகுதிகளில் 6,000 பேரும் மெனாரா சிட்டி ஒன்னில் 3,200 பேர் உள்ளனர்.