Home கலை உலகம் ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி அலைவரிசையில் வாராந்திர நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி அலைவரிசையில் வாராந்திர நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

687
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் சித்திரைப் புத்தாண்டு நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்களையும், இந்த வாரம் முழுவதும் ஆஸ்ட்ரோ விண்மீன் துல்லிய ஒளிபரப்பில் ஒளியேறவிருக்கும் வாராந்திர நிகழ்ச்சிகள் சிலவற்றின் சிறப்பம்சங்களையும் இங்கே காணலாம் :

செவ்வாய், 14 ஏப்ரல்

#TamilSchoolmychoice

தாத்தா & டேனேஸுடன் சித்திரை: பகுதி 1 (முதல்ஒளிபரப்பு – ப்ரிமியர்) – தமிழ் புத்தாண்டு (சித்திரைப் புத்தாண்டு) சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 9pm  | வீட்டில் பாதுகாப்பாக இருந்தபடி ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

மலேசிய இந்திய சமூகத்தின் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் உணர்வை வெளிப்படுத்துகிறது இந்நிகழ்ச்சி. இவ்வனுபவத்தை கண்டறிய உள்ளூர் பிரபலங்கள், டேனேஸ் மற்றும் தாத்தா இருவரும் கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதும் பயணம் செய்வர்.

செவ்வாய், 14 ஏப்ரல்

அருவம் (ப்ரிமியர்)– தமிழ் புத்தாண்டு (சித்திரைப் புத்தாண்டு) சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 10pm  | வீட்டில் பாதுகாப்பாக இருந்தபடி ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: சித்தார்த் & கேத்தரின் ட்ரேசா

 கலப்படம் செய்யப்பட்ட உணவை விற்ற சில உணவு விற்பனைக் கடைகளை மூடியதற்காக ஜகன்னாதன் என்ற உணவு பாதுகாப்பு அதிகாரி தனது எதிரிகளால் கொலை செய்யப்படுகிறார். ஓர் அப்பாவிப் பெண்ணான ஜோதி, ஜகந்நாதனின் காதலி. அவரது மரணத்திற்குப் பிறகு ஜோதியின் உடலில் சென்று, அவரது மரணத்திற்குக் காரணமானவர்களைப் பழிவாங்குகிறார் ஜகன்னாதன்.

புதன், 15 ஏப்ரல்

தாத்தா & டேனேஸுடன் சித்திரை: பகுதி 2 (ப்ரிமியர்)– தமிழ் புத்தாண்டு (சித்திரைப் புத்தாண்டு) சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 9pm  | வீட்டில் பாதுகாப்பாக இருந்தபடி ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

மலேசிய இந்திய சமூகத்தின் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் உணர்வை வெளிப்படுத்துகிறது இந்நிகழ்ச்சி. இவ்வனுபவத்தைக் கண்டறிய உள்ளூர் பிரபலங்கள், டேனேஸ் மற்றும் தாத்தா இருவரும் கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதும் பயணம் செய்வர்.

புதன், 15 ஏப்ரல்

ஜாக்பாட் (முதல் ஒளிபரப்பு – ப்ரிமியர்)- தமிழ் புத்தாண்டு (சித்திரைப் புத்தாண்டு) சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 10pm  | வீட்டில் பாதுகாப்பாக இருந்தபடி ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

 நடிகர்கள்: ஜோதிகா & ரேவதி

ஏழைகளுக்கு உதவும் வண்ணம் மோசடிகளில் ஈடுபடும் அக்சயா மற்றும் மாஷா ஆகிய இரு புத்திசாலிப் பெண்களைப் பற்றிய அதிரடி நகைச்சுவைத் திரைப்படம் இது. ஒரு வயதான பெண்மணியின் மூலம் அட்சயப் பாத்திரத்தைப் பற்றி அறிந்தவுடன் சுயநலன்களுக்காக அதைத் தங்கள் சொந்தமாக்க முயற்சி செய்கின்றனர்.