Home One Line P1 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: நாளை முதல் கைது செய்யப்படுபவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள்!

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: நாளை முதல் கைது செய்யப்படுபவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள்!

599
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் மூன்றாம் கட்டத்தில், நாளை புதன்கிழமை முதல் கைது செய்யப்படுபவர்கள் தடுத்து வைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள். இனி அபராதம் மீது கவனம் செலுத்தப்படாது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறி செயல்பட்டவர்களின் எண்ணிக்கை  9,090 ஆகவும், மொத்தம்   4,036 அபராதம் வெளியிடப்பட்டதாகவும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை  மீறியதற்காக 1,374 நபர்களை  காவல்துறை தடுத்து வைத்தது. இதில் 931 நபர்களுக்கு 1,000 ரிங்கிட்  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 418 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ” என்று அவர் இன்று  செவ்வாய்க்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.