Home One Line P1 “கொரொனாவை விரட்டுவோம்! சவால்களை சமாளிப்போம்” விக்னேஸ்வரன் புத்தாண்டு செய்தி

“கொரொனாவை விரட்டுவோம்! சவால்களை சமாளிப்போம்” விக்னேஸ்வரன் புத்தாண்டு செய்தி

809
0
SHARE
Ad

கோலாலம்பூர் – “கொரோனா தொற்றுக் கிருமியை முற்றாக ஒழிக்க அனைவரும் வீட்டில் இருந்து கைகொடுக்க வேண்டும்” என்று ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தனது சித்திரைப் புத்தாண்டு மற்றும் மலையாள சகோதர இனத்தினர் கொண்டாடும் விஷூ புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

“இந்த கோவிட் 19 நோய்த் தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வந்த பிறகு நாம் பல ரீதியில் சவால்களை எதிர்கொள்ள நேரிடும். இத்தகைய எதிர்கால சவால்களைச் சமாளிக்க நாம் அனைவரும் தயாராக வேண்டும்” என்றும் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

நாடு தற்போதைய சூழலில் ஓர் இறுக்கமான காலகட்டத்தில் இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டிய  விக்னேஸ்வரன், இந்த கோவிட் 19 நோய்த் தொற்று பரவலை தடுக்க அனைவரும் வீட்டில் இருப்பது அவசியமாகும் என்றும் தெரிவித்தார்.

“இந்த கோவிட் 19 நோய்த் தொற்று பரவல் காரணமாக அரசாங்கம் பிறப்பித்துள்ள நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையாகும். இந்த காலகட்டத்தில் அனைவரும் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் மேற்கொண்டுள்ள அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

“நாடும் நாட்டு மக்களும் இந்த கோவிட் 19 நோய்த் தொற்று பரவல் காரணமாக பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகிறார்கள். இந்த சவால்களை சமாளிக்க பிரதமர் முஹிடின் யாசின் மேற்கொள்ளும் எல்லா நடவடிக்கைகளும் மக்கள் நலனுக்காகவே என்பதால் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த சித்திரை, விஷுப் புத்தாண்டை நாம் வழக்கமாக ஆலய வழிபாட்டிற்கு சென்று கொண்டாடுவோம். ஆனால், தற்போதைய காலகட்டத்தில் சித்திரை, விஷுப் புத்தாண்டு கொண்டாட்டத்தை வீட்டில் இருந்தவாறு மிதமான அளவில் கொண்டாடுவோம்” என்று கேட்டுக் கொண்ட  விக்னேஸ்வரன் சித்திரை, விஷுப் புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.