Home வாழ் நலம் இளம் வயதினர் தினமும் 10 மணி நேரம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்காது

இளம் வயதினர் தினமும் 10 மணி நேரம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்காது

522
0
SHARE
Ad

sleepingகோலாலம்பூர், ஏப்ரல் 11- இளம் வயதினர் தினமும் 10 மணி நேரம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்காது.

உடல் எடையை குறைக்க பலவிதமான உடற்பயிற்சிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால், அதற்கெல்லாம் மேலாக நீண்ட நேரம் தூங்குவதே உடல் எடை அதிகரிக்காமல் இருக்க சிறந்த மருந்து என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பெரல்மேன் மருத்துவ கல்லூரி நிபுணர்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்படி, 14 முதல் 18 வயது வரையிலான இளம் வயதினர் இரவில் தினமும் 10 மணிநேரம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்காது.

அதே நேரத்தில் அதிக உடல் எடை இருந்தாலும் தானாக குறைந்து விடும் என தெரியவந்தது.