Home One Line P2 எண்ணெய் விலைகள் உலக அளவில் உயரத் தொடங்கின

எண்ணெய் விலைகள் உலக அளவில் உயரத் தொடங்கின

968
0
SHARE
Ad

நியூயார்க் – உலகம் முழுவதிலும் கடந்த சில வாரங்களாக கடுமையான முறையில் அமுலாக்கப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாடுகளில் தொடர்ந்து தளர்வுகள் வழங்கப்பட்டு, வாகனங்கள் மீண்டும் சாலைகளில் பெருகியதைத் தொடர்ந்து எண்ணெய் விலைகள் உலக அளவில் இன்று செவ்வாய்க்கிழமை உயரத் தொடங்கியிருக்கின்றன.

எண்ணெய் உற்பத்தி நாடுகள் தங்களின் உற்பத்தியையும் கணிசமாகக் குறைத்து விட்டன.

அமெரிக்காவில் கச்சா எண்ணெய் 2.3 விழுக்காடு விலை உயர்ந்தது. சுமார் 75 காசுகள் உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 34 அமெரிக்க டாலராக விற்பனை கண்டது.

#TamilSchoolmychoice

பிரெண்ட் ரக கச்சா எண்ணெயும் 0,7 விழுக்காடு அல்லது 23 காசுகள் உயர்ந்து பீப்பாய் ஒன்று 35.76 அமெரிக்க டாலருக்கு விற்பனையாகின.

ரஷியா, மே, ஜூன் மாதங்களுக்கான தனது உற்பத்தியில் நாளொன்றுக்கு 8.5 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயைக் குறைத்திருப்பதாக அறிவித்திருப்பது எண்ணெய் விலை உயர்வுக்கான காரணங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

எனினும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்த விலையோடு ஒப்பிடும்போது எண்ணெய் விலைகள் 45 விழுக்காடு சரிந்திருக்கின்றன.

ஓபெக் எனப்படும் எண்ணெய் உற்பத்தி நாடுகள் ஜூன் மாதத் தொடக்கத்தில் மீண்டும் ஒன்றுகூடி உற்பத்தியைக் கட்டுக்குள் வைத்திருப்பது, எண்ணெய் விலையை உயர்த்துவது போன்ற அம்சங்களை விவாதிக்கவிருக்கின்றன.

கடந்த ஏப்ரல் மாதத்தில் எண்ணெய் உற்பத்தி நாடுகள் எடுத்த முடிவின்படி மே, ஜூன் மாதத்தில் தங்களின் உற்பத்தியை நாளொன்றுக்கு 10 மில்லியன் பீப்பாய்கள் குறைத்தன.

தற்போது 7 மில்லியன் முதல் 12 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் உபரியாக எஞ்சியிருக்கின்றன. எண்ணெய்க்கான தேவைகள் அதிகரித்தால் இந்த உபரி கையிருப்பு எண்ணெய் பயன்பாட்டின் மூலம் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.