இலண்டன் : கொரொனா நச்சுயிரிக்கு எதிரான போராட்டத்தில் உலகம் ஒரு வழியாக சுமுக நிலைமைக்குத் திரும்பி வருகின்றது. இன்னொரு பக்கம் தடுப்பூசிகள் பரவலாக போடப்பட்டு வருகின்றன.
வணிகங்களும் மெல்ல மெல்ல மீட்சியடைந்து வருகின்றன. இதைத் தொடர்ந்து எண்ணெய் விலைகள் கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு கண்டுள்ளன.
பிரெண்ட் இரக கச்சா எண்ணெய் 63.76 அமெரிக்க டாலர் வரை விலை உயர்வு கண்டது. கடந்த ஆண்டு ஜனவரி 22 தொடங்கி இதுவே மிக அதிகமான விலை உயர்வாகும்.
அமெரிக்காவில் எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 60.95 அமெரிக்க டாலர் வரை உயர்ந்தன. கடந்த ஆண்டு ஜனவரி தொடங்கி மிக அதிகமான விலை உயர்வு இதுவாகும்.