கோலாலம்பூர்: முந்தைய நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் போது முன்மொழியப்பட்ட பெட்ரோல் உதவித்தொகை (பிஎஸ்பி) திட்டத்தை நீட்டிக்க வேண்டாம் என்று தேசிய கூட்டணி அரசு முடிவு செய்துள்ளதாக மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.
தீபகற்பம், சபா மற்றும் சரவாக் இடையே பெட்ரோல் விலையில் உள்ள வேறுபாடு உள்ளிட்ட பல காரணிகளைக் கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என்று தனது அமைச்சும், நிதி அமைச்சும் ஒப்புக் கொண்டதாக உள்நாட்டு வணிக மற்றும் பயனீட்டாளர் விவகாரங்களுக்கான துணை அமைச்சர் ரோசோல் வாஹிட் தெரிவித்தார்.
“பல காரணங்களின் அடிப்படையில் இந்த அமைச்சகத்திற்கும், நிதி அமைச்சகத்திற்கும் இடையிலான சந்திப்பின் போது ஜூலை 9 அன்று இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று ரோசோல் தெரிவித்தார்.
இந்த திட்டத்தை முதன்முதலில் 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 7- ஆம் தேதி அப்போதைய உள்நாட்டு வணிக மற்றும் பயனீட்டளார் விவகார அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் அறிவித்தார்.
2020 வரவுசெலவுத் திட்டத்தின் கீழ், அரசாங்கம் இந்த நோக்கத்திற்காக 2.2 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.