Home One Line P1 சிலிம் சட்டமன்றம்: அம்னோ வேட்பாளர் போட்டியிட கூட்டணி ஒப்புதல்

சிலிம் சட்டமன்றம்: அம்னோ வேட்பாளர் போட்டியிட கூட்டணி ஒப்புதல்

545
0
SHARE
Ad

ஈப்போ: ஆகஸ்ட் 29- ஆம் தேதி நடைபெறவுள்ள சிலிம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்னோவிலிருந்து ஒரு வேட்பாளரை நிறுத்த பேராக் தேசிய கூட்டணி ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த விஷயத்தை பேராக் பெர்சாத்து கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் பைசால் அசுமு தெரிவித்தார்.

“தேசிய கூட்டணியில் உள்ள அனைத்து தரப்பினரும் ஒரே ஒரு வேட்பாளரை மட்டுமே களமிறக்க ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே எந்த மோதலும் இல்லை. வேட்பாளருக்கு எங்கள் முழு ஆதரவையும் வழங்குவோம்” என்று அவர் கூறினார் .

#TamilSchoolmychoice

மேலும் கருத்து தெரிவித்த அவர், பெர்சாத்து கட்சி தேர்தல் களத்தில் இறங்கி வேட்பாளருக்கு இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்ய உதவும் என்றும் கூறினார்.

தேர்தல் இயந்திரங்கள் வேட்பாளருக்கு வாக்காளர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவதை உறுதி செய்வதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த ஜூலை 15-ஆம் தேதி, டத்தோ முகமட் குசாய்ரி அப்துல் தாலிப், 59, காலமானதைத் தொடர்ந்து, சிலிம் இடைத்தேர்தல் ஆகஸ்ட் 29- ஆம் தேதி நடைபெற உள்ளது.