Home One Line P1 சிலிம் சட்டமன்றம்: ஆகஸ்டு 29-இல் தேர்தல்!

சிலிம் சட்டமன்றம்: ஆகஸ்டு 29-இல் தேர்தல்!

506
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிலிம் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகஸ்டு 29-இல் நடைபெறுகிறது.

தேர்தலுக்கான மனு தாக்கல் செய்யப்படும் நாள் ஆகஸ்டு 15 என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்கூட்டிய வாக்களிப்பு ஆகஸ்டு 25 நடைபெறும் என்று அது தெரிவித்தது.

சிலிம் சட்டமன்ற உறுப்பினர் ஜூலை 15-இல் பகாங் பெந்தோங்கில் காலமானார்.

#TamilSchoolmychoice

அவர் தஞ்சோங் மாலிம் அம்னோ பிரிவுத் தலைவருமாவார்.

அவானா கென்திங் ஹைலேண்ட்ஸ் கோல்ப் அண்ட் கன்ட்ரி ரிசார்ட்டில் கோல்ப் விளையாடும் போது, 59 வயதான முகமட் குசைரி திடீரென சரிந்து விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர் மாரடைப்பால் காலமானார் என்று பின்பு தெரிவிக்கப்பட்டது.