Home One Line P1 புதிய கட்சி தொடங்கப்படலாம்!- மகாதீர்

புதிய கட்சி தொடங்கப்படலாம்!- மகாதீர்

462
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சி தம்மையும் பிற கட்சித் தலைவர்களையும் நீக்கியது தொடர்பில் நீதிமன்றம், ஆகஸ்ட் தொடக்கத்தில் எதிர்பார்த்தது போல் தீர்ப்பு வழங்காவிட்டால், டாக்டர் மகாதீர் முகமட் மற்றொரு அரசியல் கட்சியை உருவாக்கலாம்.

“நாங்கள் கைவிடப்பட்டால், மற்றொரு கட்சியை உருவாக்குவதற்கான சாத்தியத்தை நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று லங்காவி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதமருமான டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

நேற்று புதன்கிழமை சேனல் நியூஸ் ஏசியாவுடன் பேசிய 95 வயதான மகாதீர், அடுத்த பொதுத் தேர்தலில் பங்கேற்கலாமா இல்லையா என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று கூறினார்.

#TamilSchoolmychoice

“இது நான் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் பிரச்சாரம், பலவற்றில் நான் மிக முக்கியமான பங்கு வகிப்பேன்.

“பொதுத் தேர்தல் நடைபெறும் போது எனக்கு 98 வயதாக இருந்தால், நிச்சயமாக உடல் ரீதியான தடைகள் இருக்கும். ஆனால், நான் ஆரோக்கியமாக இருந்தால், என்னால் முடிந்த ஆதரவை தருவேன்,” என்று அவர் கூறினார்.

மகாதீர் மற்றும் நான்கு பேர் தாக்கல் செய்த சம்மன்களை இரத்து செய்ய பெர்சாத்து தலைவரும் பிரதமருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் விண்ணப்பித்ததைத் தொடர்ந்து, தீர்ப்பு ஆக்ஸ்டு 7-இல் வழங்கப்படும்.