Home One Line P1 ஹாடி அவாங் மூச்சுத் திணறலால் மருத்துவமனையில் அனுமதி

ஹாடி அவாங் மூச்சுத் திணறலால் மருத்துவமனையில் அனுமதி

527
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : பாஸ் கட்சித் தலைவர் ஹாஜி அப்துல் ஹாடி அவாங் மூச்சுத் திணறல் காரணமாக நேற்று திங்கட்கிழமை (பிப்ரவரி 16) இரவு புத்ரா ஜெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல் நிலை சீராக இருந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

73 வயதான ஹாடி அவாங் இருதய நோய் காரணமாக அடிக்கடி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளார்.

#TamilSchoolmychoice

நேற்றிரவு 9.30 மணியளவில் அவர் கோலாலம்பூரில் உள்ள தேசிய இருதயக் கழகத்திற்கு அவசரச் சிகிச்சை ஊர்தி (ஆம்புலன்ஸ்) மூலம் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.

ஹாடி அவாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை பிரதமர் துறை அமைச்சர் (மதவிவகாரங்கள்) அகமட் மார்சுகி ஷாரி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

“களைப்பு காரணமாக ஹாடி அவாங்கின் இதயம் பலவீனமடைந்திருக்கலாம்” என அகமட் மார்சுகி குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கும் ஹாடி அவாங் சிகிச்சை பெற்று வருவதைத் தனது முகநூலில் குறிப்பிட்டார். கடவுள் அருளால் சீக்கிரமே அவர் குணமடைய வேண்டும் என்றும் நஜிப் தனது பதிவில் குறிப்பிட்டார்.

2017-ஆம் ஆண்டில் ஹாடி அவாங் தேசிய இருதயக் கழகத்தில் இருதயத்துக்கான இரத்தக் குழாய் மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார்.