Home One Line P2 “சுகர் புக்” – சர்ச்சைக்குரிய இணையத் தளம் மலேசியாவில் தடை செய்யப்பட்டது

“சுகர் புக்” – சர்ச்சைக்குரிய இணையத் தளம் மலேசியாவில் தடை செய்யப்பட்டது

744
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கடந்த சில நாட்களாக மலேசிய ஊடகங்களிலும், சமூக இயக்கங்களுக்கிடையிலும் பெரும் சர்ச்சையை எழுப்பியிருந்த “சுகர் டேடி” என்ற நடைமுறையைக் கொண்ட இணையத் தளமான “சுகர் புக்” இன்று திங்கட்கிழமை (பிப்ரவரி 15) மலேசிய தொடர்பு, பல்ஊடக ஆணையத்தால் தடை செய்யப்பட்டது.

மாணவிகள், இளம் பெண்களுக்குத் தேவையான பண உதவிகளைச் செய்து அதற்குப் பதிலாக தங்களுக்குத் தேவையான இச்சைகளைத் தீர்த்துக் கொள்ளும் பரிமாற்றத் தளமாக இந்த “சுகர் புக்” தளம் இயங்கி வந்தது.

கலாச்சாரத்துக்கு முரணாக இதுபோன்ற நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் இணையத் தளம் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து விடுக்கப்பட்டு வந்தன.

#TamilSchoolmychoice

மலேசிய தொடர்பு, பல்ஊடக சட்டத்திற்கு எதிரானதாகவும் இந்த இணையத் தள செயல்பாடு பார்க்கப்பட்டது.

இந்த இணையத் தளத்தைப் பயன்படுத்தியவர்கள், நடத்தியவர்கள் சட்டத்தை மீறியது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மலேசிய தொடர்பு, பல்ஊடக ஆணையம் தெரிவித்திருக்கிறது.

இந்த இணையத் தளப் பயன்பாட்டில் விபச்சாரத்திற்கான அறிகுறிகள் தென்பட்டால் அதற்காக காவல் துறையும் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.