Home One Line P2 ஆஸ்ட்ரோ “இப்படிக்கு இலா” தொடரின் கலைஞர்களுடன் சிறப்பு நேர்காணல்

ஆஸ்ட்ரோ “இப்படிக்கு இலா” தொடரின் கலைஞர்களுடன் சிறப்பு நேர்காணல்

642
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோ வானவில் எச்டி அலைவரிசையில் (அலைவரிசை எண் : 201)  திங்கள் முதல் வியாழன் வரை வாரந்தோறும் ஒளியேறி வரும் “இப்படிக்கு இலா” தொடரின் நடிகர்கள் மற்றும் குழுவினருடன் ஒரு சிறப்பு நேர்காணல் :

ஆதி பாஸ்கரன், இயக்குநர்:

1. இத்தொடரின் பின்னணியில் உங்களின் உத்வேகம் மற்றும் இயக்குநராக உங்களின் பின்னணியைப் பற்றிக் கூறுங்கள்?

“இப்படிக்கு இலா” இயக்குநர் ஆதி.பாஸ்கரன்

இன்றுவரை என்னுடைய வெற்றிக்கு அளப்பரியப் பங்காற்றிய என் பெற்றோருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். என் அப்பா ஒரு திரைப்பட சீடி கடை வைத்திருந்ததால் நான் சிறு வயதிலிருந்தே திரைப்படங்களைப் பார்த்தும் ஆராய்ந்தும் வளர்ந்தேன்.

#TamilSchoolmychoice

மனிதர்களின் மீது திரைப்படங்கள் ஏற்படுத்தும் அதிசய விளைவுகளைக் கண்டு, ஒரு நாள் நானும் அவ்வாறே செய்ய வேண்டும் என முடிவுச் செய்தேன். பல குறும்படங்களுக்கு இயக்குநராகவும், துணை இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவங்கள், திரைக்கதை எழுதுவதில் ஆர்வம் மற்றும் எனது நீண்டகால ஒத்துழைப்பாளரான தினகரன் ராம்குமார் மற்றும் திரைப்பட விரும்பியான என் நண்பர், சதிஸ் பிரபாவதி ஆகியோருடனான சாதாரண சந்திப்புக்குப் பிறகு ஒரே இரவில் உருவானக் கதையே இப்படிக்கு இலா.

நகைச்சுவையான 90-ஆம் ஆண்டுகளின் குழந்தைப் பருவச் சம்பவங்களை நினைவுகூரும் எண்ணமே “இப்படிக்கு இலா” தொடரை இயக்க என்னைத் தூண்டியது.

2. இதை வெற்றிகரமாக இயக்கிய உங்களின் அனுபவத்தைப் பற்றி கூறுங்கள்?

ஆரம்பத்தில், எனது அனுபவம் போதவில்லை. இருப்பினும், படப்பிடிப்பு முன்னேறுகையில் பிறவற்றைக் கற்றுக்கொண்டேன். எனது இணைப் படைப்பாளர்களான தினகரன் ராம்குமார் மற்றும் சதிஸ் பிரபாவதி ஆகியோருடன், வரையறுக்கப்பட்ட அனுபவத்துடன் எங்களது முதல் பெரிய அளவிலானத் திட்டம், இப்படிக்கு இலா. ஆயினும்கூட, செயல்முறை முழுவதும் வேடிக்கையாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. இறுதியில், நாங்கள் இங்கு நிற்கிறோம். ‘CLOWNS IFS’ தற்போது இப்படிக்கு இலா தொடரை வழங்குகிறது.

யுவராஜ் கிருஷ்ணசாமி, நடிகர்:

1. இப்படிக்கு இலா தொடரில் நீங்கள் நடித்த கதாபாத்திரத்தைப் பற்றிப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்?

யுவராஜ் கிருஷ்ணமூர்த்தி

எனது கதாபாத்திரம் ‘சுஹன்’ என்று அழைக்கப்பட்டது. இந்தத் தொடரில் நான் கதை சொல்பவராக வலம் வந்தேன். ஆதரவற்றோர் இல்லத்தை நிர்வகித்து வந்தேன். இலக்கியனின் வாழ்க்கையையும், இந்தத் தொடரின் மற்றொரு முக்கியமான கதாபாத்திரமான பேக்கஸ்டரையும் விவரித்துக் கதைக் கூறினேன்.

2. இந்தத் தொடருக்கான உங்களின் சில நம்பிக்கைகள் யாவை?

இந்தத் தொடர் அனைத்து தரப்பு இரசிகர்களையும் பரவலாக கவர்ந்திழுக்கும் என்று நம்புகிறேன். இலக்கியனின் பயணம் 90-களில் வாழ்ந்தவர்களின் குழந்தைகள் அல்லது பெற்றோரின் நினைவுகளைப் புதுப்பிக்கும். இந்தத் தொடர் இன்றைய தலைமுறையினருக்கு 90-களின் சகாப்தத்தில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும். இத்தொடர், அதன் தகுதியான வெற்றிகளை அடையும் என்று நம்புகிறேன்.