கோலாலம்பூர்: இங்குள்ள ஜாலான் டுத்தாவில் சாலைத் தடுப்பில் பெண் ஓட்டுநரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படும் காவல் துறை அதிகாரி அலுவலக வேலையில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் நேர்மை மற்றும் தரநிலை இணக்கத் துறை இயக்குனர் ஜாம்ரி யஹ்யா தெரிவித்தார்.
” ஆரம்ப நடவடிக்கையாக அவரை சாலைத் தடுப்பு பணியிலிருந்து விடுவித்துள்ளோம். அவரை கடமைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்படவில்லை,” என்று அவர் இன்று பெர்னாமாவிடம் கூறினார்.
விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சந்தேகநபர் தற்காலிகமாக நிர்வாக பிரிவுக்கு மாற்றப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பிப்ரவரி 12-ஆம் தேதி, ஒரு பெண் தனது டுவிட்டர் கணக்கில் பகிர்ந்த காணொலியில், ஜாலான் டுத்தா சாலைத் தடுப்பில் காவல்துறையினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் கூறினார்.