கோலாலம்பூர்: தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் மரண விசாரணையின் வழக்கில் மேற்கொண்டு நடவடிக்கைகள் குறித்து வினவப்பட்டபோது, பொறுமை காக்குமாறு சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹருண் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், எப்போது இது வெளியிடப்படும் என்பது குறித்து இட்ருஸ் வெளியிடவில்லை.
“தயவுசெய்து பொறுமையாக காத்திருங்கள், நாங்கள் பின்னர் ஒரு முடிவை எடுப்போம். நாங்கள் பின்னர் ஒரு அறிக்கையை வெளியிடுவோம்,” என்று இட்ருஸ் இன்று மலேசியாகினியிடம் கூறினார்.
இந்த வழக்கைப் பற்றிய புதிய விசாரணையின் முடிவை சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் அறிவிக்கும் என்று அப்துல் ஹாமிட் கூறினார்.
எவ்வாறாயினும், சந்தேக நபர்கள் எவரையும் அடையாளம் காணாமல் காவல் துறை தனது விசாரணையை முடித்துள்ளதாக வட்டாரங்கள் மலேசியாகினியிடம் தெரிவித்தன.
“காவல் துறை இறுதி வரை விசாரணை நடத்தியது. சந்தேக நபர்களை அடையாளம் காண முடியவில்லை. ஒருவரும் கூட இல்லை. மரண விசாரணை நீதிமன்ற கண்டுபிடிப்புகள் புதுமையானது,” என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.