Home நாடு இட்ருஸ் ஹாருண் பதவி விலக வேண்டும் – பக்காத்தான் கூட்டணி வலியுறுத்து

இட்ருஸ் ஹாருண் பதவி விலக வேண்டும் – பக்காத்தான் கூட்டணி வலியுறுத்து

685
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மாமன்னரின் உத்தரவுக்கு முரண்பாடான சட்ட ஆலோசனையை வழங்கியிருக்கும் சட்டத் துறை தலைவர் (அட்டர்னி ஜெனரல்) இட்ருஸ் ஹாருண் தனது பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டுமென பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 5) வலியுறுத்தியது.

பிரதமராக நியமிக்கப்படுபவர் யாராக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென மாமன்னர் அறிக்கை ஒன்றின் வழி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் இதன் தொடர்பில் அறிக்கை வெளியிட்டிருக்கும் சட்டத் துறை தலைவர் இட்ருஸ் ஹாருண், பிரதமர் தனது பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டியதில்லை என்றும் அவ்வாறு செய்வது மாமன்னரின் அதிகாரத்தை மீறுவதற்கு ஒப்பாகும் எனத் தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

இதனைக் கண்டித்து அறிக்கை விட்ட பக்காத்தான் ஹாரப்பான் தலைவர்கள் மன்றம், மாமன்னரும், துணை மாமன்னரும் விடுத்த அறிக்கைக்கு மாறாக ஆலோசனை வழங்கியிருக்கிறார் சட்டத் துறை தலைவர் எனக் கண்டனம் தெரிவித்தனர். அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டுமெனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் மன்றம் சார்பில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், அமானா தலைவர் முகமட் சாபு, ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகிய மூவரும் கூட்டாக அந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal