Home கலை உலகம் ஆஸ்ட்ரோ வாராந்திர நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ வாராந்திர நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

1346
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஜூன் மாதம் தொடங்கி ஆஸ்ட்ரோவில் ஒளியேறவிருக்கும் சில சிறப்பு நிகழ்ச்சிகளின் முக்கிய அம்சங்களை இங்கே காணலாம் :

சனி, 6 ஜூன் முதல் “நக்கீரன்” (முதல் ஒளிபரப்பு – பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

#TamilSchoolmychoice

சிந்தனையைத் தூண்டும் புத்தம் புதிய உள்ளூர் தமிழ் ஆவணப்படத் தொடர். இத்தொடர் 30 அத்தியாயங்களைக் கொண்டிருக்கும். அவை உள்ளூர் சமூகங்களை உள்ளடக்கிய தற்போதையக் கடினமான சிக்கல்களைக் களையும் வண்ணம் ஆழமான அணுகுமுறைகளை விவரிக்கும்.

பேட்ட RAP (முதல் ஒளிபரப்பு – பிரிமியர்)

ZEE தமிழ் எச்டி (அலைவரிசை 235), 2.30pm | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

தொகுப்பாளர்கள்: தீபக் & மகேஸ்வரி

ZEE தமிழில் ஒரு புதிய ரியாலிட்டி விளையாட்டு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் 2 அணிகள் ஒருவருக்கொருவர் பல்வேறு நிலைகளில் போட்டியிடுவர். பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் உற்சாகமான விளையாட்டுகளில் போட்டியாளர்கள் பங்கேற்பார்கள்.

காமெடி கேங்ஸ்டர்ஸ் (முதல் ஒளிபரப்பு – பிரிமியர்)

ZEE தமிழ் எச்டி (அலைவரிசை 235), 3.30pm | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

தொகுப்பாளர்கள்: மிர்ச்சி விஜய் & பூர்ணிமா ரவி

காமெடி கேங்ஸ்டர்ஸ் என்பது ZEE தமிழில் 2019-ஆம் ஆண்டு ஒளிபரப்பான புனைக்கதை அல்லாத நகைச்சுவை நிகழ்ச்சி. பிரபலமான ஆன்லைன் உள்ளடக்கப் படைப்பாளர்களுக்கு இந்த நிகழ்ச்சி சாட்சியாக இருக்கும். அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு பொதுவான மேடையில் ஒன்றாக வருவார்கள். பார்வையாளர்கள் அவர்களின் படைப்பை மதிப்பீடு செய்வார்கள்.

ZEE சினி விருதுகள் தமிழ் 2020 (Zee Cine Awards) (முதல் ஒளிபரப்பு – பிரிமியர்)

ZEE தமிழ் எச்டி (அலைவரிசை 235), 6.30pm

ZEE சினி விருதுகள் தமிழ் 2020 என்பது பார்வையாளர்களின் தேர்வை மையமாகக் கொண்டு சிறந்த நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் பலர் உட்பட கோலிவுட் பிரபலங்களை கௌரவிப்பதற்காக நடத்தப்பட்ட விருது விழா ஆகும்.

பிரம்மாண்டமான இவ்விருது விழாவில் கமல்ஹாசன், தனுஷ், ஏ.ஆர்.ரஹ்மான், ஷங்கர், நயன்தாரா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ், நவாசுதீன் சித்திகி, விஜய் சேதுபதி, அனிருத் ரவிச்சந்தர், ஜி.வி.பிரகாஷ், யுவன் ஷங்கர் ராஜா, இம்மான் மற்றும் பல பிரபல நட்சத்திரங்கள் கலந்து சிறப்பித்தனர்.

அபிமான/பிடித்த திரைப்படம் பிரிவில் தல அஜித்தின் விஸ்வாசம் முதலிடத்தையும், தியாகராஜன் குமாரராஜாவின் சூப்பர் டீலக்ஸ் ஜூரி தேர்வில் முதலிடத்தையும் பிடித்தது.

ஏ.ஆர்.ரஹ்மான் ‘Pride of Indian Music’ விருதையும் கமல்ஹாசன் ‘Pride of Indian Cinema’ விருதையும் வென்றனர். இந்திய சினிமாவில் சிறந்து விளங்கியதற்காக கே.பாலசந்தரின் மதிப்புமிக்க விருது ஷங்கருக்கு வழங்கப்பட்டது.

2.0 (அலைவரிசை முதல் ஒளிபரப்பு – பிரிமியர்)

ரஜினி70 எச்டி (அலைவரிசை 100), 9.00 மணி இரவு.

நடிகர்கள்: ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் & ஏமி ஜாக்சன்

சென்னையில் உள்ளவர்களின் கைகளில் இருந்து கைப்பேசிகள் மர்மமான முறையில் பறக்கத் தொடங்கிய பிறகு, டாக்டர் வசீகரன் தனது நம்பகமான ரோபோ சிட்டியை பட்சிராஜனின் பறவை வடிவ அமானுஷ்ய சக்திகளைத் தடுக்க அழைக்கிறார்.

ஓ மை கோட்! (முதல் ஒளிபரப்பு – பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), 10.00 மணி இரவு | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: பரேஷ் ராவல் & அக்‌ஷய் குமார்

நிலநடுக்கத்தினால் தனது கடை அழிந்ததால் ஒரு கடைக்காரர் கடவுளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

ஞாயிறு, 7 ஜூன்

ஜில் ஜங் ஜக் (முதல் ஒளிபரப்பு – ப்ரிமியர்)

ZEE தமிழ் எச்டி (அலைவரிசை 235), 1.30pm | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

தொகுப்பாளர்கள்: கதிர் & மதன்

2 அணிகள் ஒருவருக்கொருவர் போட்டியிடும் ஒரு விளையாட்டு நிகழ்ச்சி. ஒவ்வொரு அணியிலும் 4 பெண்கள் இருப்பார்கள். அவர்கள் வெற்றியாளரின் இடத்திற்காக போராடுவார்கள். ஜில் ஜங் ஜக் 3 நிலைகளைக் கொண்டது. மேலும், அதிக புள்ளிகளைக் கொண்ட அணி வெற்றியாளராக அறிவிக்கப்படும்.

ஜீன்ஸ் (முதல் ஒளிபரப்பு – பிரிமியர்)

ZEE தமிழ் எச்டி (அலைவரிசை 235), 2.30pm | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

தொகுப்பாளினி: பிரியா ராமன்

இந்த தனித்துவமான நிகழ்ச்சியில், பங்கேற்கும் பிரபல விருந்தினர்கள், அவர்களின் மரபணு ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு, நிகழ்ச்சியில் அழைக்கப்பட்ட ஒரு குழுவினருக்கு இடையிலான உறவை அடையாளம் காண வேண்டும்.

மன்னன் (அலைவரிசை ப்ரிமியர்)

ரஜினி70 எச்டி (அலைவரிசை 100), மாலை 6.00 மணி

நடிகர்கள்: ரஜினிகாந்த், விஜயசாந்தி & குஷ்பூ

லட்சிய தொழிலதிபர் சாந்தி தேவி தனது துணைக்கான அம்சங்களை தனது ஊழியர் கிருஷ்ணனிடம் உணர்கிறார். அவளை அவர் ஈர்த்தாலும் இருவருக்கும் இடையே தான் எனும் அகங்காரம் உள்ளது. தோல்விகளைச் சமாளிக்க முடியாத ஒரு பெண்ணாக சித்தரிக்கப்படுகிறார் சாந்தி தேவி. தனது தொழிற்சாலை தொழிற்சங்கத் தேர்தலில் அவரது வேட்பாளரை கிருஷ்ணன் எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

இது தொடர்ச்சியான நிகழ்வுகளின் தொடக்கமாகும். கிருஷ்ணனைத் திருமணம் செய்து அவர் வாழ்க்கையை சீரழிக்க ஒரு சதித்திட்டம் தீட்டுகிறார். தன் சூழ்ச்சியில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதே இக்கதையின் சிறப்பம்சமாகும்.

மெட்ரோ மாலை (முதல் ஒளிபரப்பு – பிரிமியர்)

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை  201), 9pm | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: சதீஷ் குமார் & புனிதா சண்முகம்

கோலாலம்பூர் நகரில் நிராகரிக்கப்பட்ட ஆண் கிதார் கலைஞர் மற்றும் புறக்கணிக்கப்பட்ட பெண் இருவருக்கும் இடையே பூத்த காதல்.

சிவாஜி (அலைவரிசை பிரிமியர்)

ரஜினி70 எச்டி (அலைவரிசை 100), இரவு 9.00 மணி

நடிகர்கள்: ரஜினிகாந்த், ஸ்ரேயா சரண் & சுமன்

ஒரு மென்பொருள் பொறியியலாளர் தனது இந்திய தேசத்திற்கு சேவை செய்வதற்கும் நாட்டின் நலனில் முதலீடு செய்வதற்கும் இந்தியாவிற்கு வருகிறார். ஒரு சில ஊழல் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஏழைகளுக்கு நல்லது செய்ய முயற்சிக்கும்போது அவரைத் தடுக்கின்றனர்.

குற்றம் குற்றமே (புதிய அத்தியாயம் – 4)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 8.00 மணி  | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

பள்ளி பயிலும் இரு இளம் குண்டர்கள் மத்தியில் பிரச்சனை ஏற்பட்டதால் அது பெரும் விளைவையும் பதற்றத்தையும் ஏற்படுத்துகின்றது. எனவே, பள்ளிப் பாதுகாவலர் காவல் துறையினரை அழைக்க, தப்பிக்க முடியாத சில இளைஞர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்படுகின்றனர்.

திங்கள், 8 ஜூன்

தமிழ்லட்சுமி (முதல் ஒளிபரப்பு – பிரிமியர்)

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை  201) , இரவு 9.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்:  ஜஸ்மீன் மைக்கல், ஹேமாஜி & மூன் நிலா

மலேசியத் தமிழ் பெண்களின் அதிகாரத்துவம் (women empowerment) சார்ந்த நாடகம் மற்றும் மர்மத் தொடர். கோலாலம்பூர் நகரில் அமைக்கப்பட்ட தமிழ்லட்சுமி ஒரே இடத்தில் வசிக்கும் திருமணமான மூன்று பெண்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கின்றது. கதையோட்டம் உள்நாட்டுப் போராட்டங்கள் மற்றும் குடும்ப வாழ்க்கையைத் தொடவே, கதவுகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் இரகசியங்கள், குற்றங்கள் மற்றும் மர்மங்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் மேற்பரப்பில் அழகான, சரியான புறநகர் சுற்றுப்புறமாக தெரிவதைச் சித்தரிக்கிறது.

லிங்கா (அலைவரிசை முதல் ஒளிபரப்பு – பிரிமியர்)

ரஜினி70 எச்டி (அலைவரிசை 100), இரவு 9.00 மணி

நடிகர்கள்: ரஜினிகாந்த், அனுஷ்கா ஷெட்டி & சோனாக்க்ஷி சின்ஹா

ஓர் அணை கட்டுவதில் தனது தாத்தா வகித்த பங்கைப் பற்றி அறிந்த பிறகு சிறு திருட்டுகளை செய்து வந்த திருடன் திருந்துகிறான்.

வியாழன், 11 ஜூன்

ஜூந்தா கஹின் கா (முதல் ஒளிபரப்பு – பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9.00 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ரிஷி கபூர், ஜிம்மி ஷேர்கில், லில்லெட் துபே & சன்னி சிங்

சிறந்த நண்பர்களான வருண் மற்றும் கரண் எந்தவிதமான குழப்பமும் வராது என்று எண்ணி அடையாளங்களை இடமாற்றம் செய்து தங்கள் காதலை தொடர்கையில் அது பெரும் குழப்பங்களுக்கு வழிவகுக்கின்றது.

வெள்ளி, 12 ஜூன்

டே நைட் (முதல் ஒளிபரப்பு – பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஆதர்ஷ் & அன்னம் ஷாஜன்

சேலம் மற்றும் சென்னை இடையே ஒர் இரயில் கொள்ளை ஏற்பட, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அப்பணம் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் பயணிக்கிறது.

சனி, 13 ஜூன்

ரோட் (ப்ரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10.00 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: மனோஜ் பாஜ்பாய், விவேக் ஓபராய் & அந்தாரா மாலி

ஒரு ஜோடி சாலையில் செல்லும் ஒருவரிடம் போக்குவரத்து உதவியை நாட முடிவு செய்கின்றனர். ஆனால், அவர்கள் தேர்வு செய்தவர் ஒரு மனநோயாளியாக இருக்கவே அவர் அவர்களை ஆபத்தில் ஆழ்த்துகிறார்.

தி மேகிங் ஓவ் வெடிகுண்டு பசங்க (The making of Vedigundu Pasangge) (முதல் ஒளிபரப்பு – பிரிமியர்)

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை  201), இரவு 7.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

அவர்களின் இனிமையான நினைவுகள், போராட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து டேனேஸ் குமார், சங்கீதா மற்றும் இயக்குனர் டாக்டர் விமலா பெருமாள் ஆகியோருடன் ஓர் அற்புதமான நேர்காணல். இத்திரைப்படத் தயாரிப்பின் திரைக்குப் பின்னால் ஏற்பட்ட சம்பவங்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெறும்.

தளபதி (அலைவரிசை முதல் ஒளிபரப்பு – பிரிமியர்)

ரஜினி70 எச்டி (அலைவரிசை 100), மாலை 6.00 மணி

நடிகர்கள்: ரஜினிகாந்த், மம்மூட்டி & ஷோபனா

சேரியில் வளர்க்கப்பட்ட சூர்யா என்ற அனாதை நல்ல விஷயங்களுக்காக குற்றங்கள் புரியும் தேவராஜ் என்ற முதலாளியுடன் நட்பு கொண்டு அவருக்காக வேலை செய்கிறான். ஒரு புதிய நேர்மையான மாவட்ட கலெக்டர் வரும்போது அவர்களின் நிலைக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

சந்திரமுகி (அலைவரிசை முதல் ஒளிபரப்பு – பிரிமியர்)

ரஜினி70 எச்டி (அலைவரிசை 100), இரவு 9.00 மணி

நடிகர்கள்: ரஜினிகாந்த், ஜோதிகா & பிரபு

கைவிடப்பட்ட மாளிகையில் பழிவாங்க எண்ணும் ஒரு பெண்ணின் ஆவியால் நிகழும் மர்ம நிகழ்வுகள்.

ஞாயிறு, 14 ஜூன்

யோதா (Yodha) (ப்ரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10.00 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: சன்னி தியோல், சஞ்சய் தத் & சங்கீதா பிஜ்லானி

உண்மை, நியாயம் மற்றும் நீதிக்காக போராடும் வக்கீல் கரண், ‘டாகா’ என்று அழைக்கப்படும் நீதிபதி தர்மேஷ் அக்னிஹோத்ரியை  தனது பத்திரிகை நிபுணத்துவத்தைப்  பயன்படுத்தி அம்பலப்படுத்தியதோடு அவரது முகத்திரையை கிழித்த பத்திரிகையாளர் சந்திரகாந்தின் மகன் ஆவார்.

நலம் அறிய ஆவல் (முதல் ஒளிபரப்பு – பிரிமியர்)

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை  201) , காலை 11.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

ஒரு மருத்துவ இதழைச் சார்ந்த இந்நிகழ்வு 10 அத்தியாயங்களைக் கொண்டது. வயது, இனம் மற்றும் பாலினம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு மலேசியர்களிடையே ஏற்படும் தற்போதைய மிகவும் ஆபத்தான நோய்களைப் பற்றி பார்வையாளர்களுக்கு பயனுள்ள தகவல்களை வழங்குகிறது. யோகா, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு முறை என ஆரோக்கியமான வாழ்க்கை நடைமுறைகளின் பல்வேறு குறிப்புகளையும் இந்நிகழ்வு வழங்கும்.

குற்றம் குற்றமே (புதிய அத்தியாயம் – 5)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 8.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

அமுதன் தனது புதிய இணைய நண்பரிடமிருந்து பரிசு பார்சலைப் பெறுகிறார். அதன்பிறகு, அசோக் என்ற அறியப்படாத நபரிடமிருந்து ஓர் அழைப்பு வருகிறது. அழைத்தவர் தன்னை ஒரு இன்ஸ்பெக்டர் என்று அறிமுகப்படுத்துகிறார். புதிய இணைய நண்பரால் அமுதனுக்கு அனுப்பப்பட்ட பார்சலில் போதைப்பொருட்களைக் கண்டுபிடித்ததாகவும், அமுதன் எந்தவொரு பிரச்சினையையும் எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்காக பணம் பரிவர்த்தனை செய்யப்பட வேண்டும் என்றும் கோருகிறார். தனக்கு அதிக தேர்வுகள் இல்லை என்று உணர்ந்த அமுதன், அசோக் என்ற நபருக்குக்கு பணம் அனுப்பத் தொடங்குகிறார்.