Home One Line P1 ஜூன் 10 முதல் கூடுதல் தளர்வுகள் – ஆகஸ்ட் 31 வரையில் மீட்சி நிலை காலகட்டம்

ஜூன் 10 முதல் கூடுதல் தளர்வுகள் – ஆகஸ்ட் 31 வரையில் மீட்சி நிலை காலகட்டம்

770
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – தற்போது அமுலில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு எதிர்வரும் ஜூன் 10-ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது.

அந்த தேதிக்குப் பின்னர் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுகிறது என பிரதமர் மொகிதின் யாசின் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். பிற்பகல் 3.00 மணியளவில் வானொலி, தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் மொகிதின் யாசின் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

குறிப்பாக, ஜூன் 10-ஆம் தேதிக்குப் பிறகு மாநிலங்களுக்கிடையிலான பயணங்களுக்கான தடை நீக்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

கூடுதல் தளர்வுகளுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்ந்து எதிர்வரும் ஆகஸ்ட் 31 வரை அமுலில் இருக்கும்.

கொவிட்-19 பாதிப்புகளில் இருந்து நாடு மீட்சி பெற்று வருகிறது என்றும் தெரிவித்த பிரதமர், இதன் காரணமாக ஜூன் 10-ஆம் தேதிக்குப் பிறகு கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலகட்டம் “மீட்சி காலம்” என அழைக்கப்படும் என்றும் கூறினார்.

முதல் கட்டமாக முடிதிருத்தும் கடை மற்றும் அழகு நிலையங்கள் ஜூன் 10 முதல் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் நேற்று அறிவித்திருந்தார்.

ஜூன் 15 முதல் இரவு சந்தைகள் மற்றும் திறந்த சந்தை கடைகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்றும் இஸ்மாயில் சப்ரி கூறியிருந்தார்.

ஆனால், இவை அனைத்தும் கடுமையான வழிகாட்டுதல்களுக்கு மத்தியில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.