Home One Line P2 ஆஸ்ட்ரோ : 28 ஜூலை முதல் புதிய தொடர்கள் – அத்தியாயங்கள்

ஆஸ்ட்ரோ : 28 ஜூலை முதல் புதிய தொடர்கள் – அத்தியாயங்கள்

816
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி அலைவரிசைகளில் எதிர்வரும் ஜூலை 28 முதல் ஒளியேறவிருக்கும் சில நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்களை இங்கே காணலாம்:

கலர்ஸ் தமிழ் எச்டி

வெற்றி விநாயகர் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் தமிழ் எச்டி (அலைவரிசை 233), 11இரவு | திங்கள்-வெள்ளி |

#TamilSchoolmychoice

ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

இத்தொடர் பால விநாயகர் இறைவனாக மாறியதன் அழகிய பயணத்தையும் அவரது தாயார் பார்வதி தேவியுடனான சிறப்புப் பிணைப்பையும் மிக அழகாக சித்தரிக்கின்றது.

சன் தொலைக்காட்சி

தேவி ஆதிபராசக்தி (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

சன் தொலைக்காட்சி (எச்டி அலைவரிசை 234 / அலைவரிசை 211), 6.30 மாலை | திங்கள்-வெள்ளி |

ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

இந்து தெய்வமும் சிவபெருமானின் மனைவியுமான ஆதி பராசக்தியின் வாழ்க்கைப் பயணத்தை இந்நாடகம் சித்தரிக்கின்றது.

மர்மதேசம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

சன் தொலைக்காட்சி (எச்டி அலைவரிசை 234 / அலைவரிசை 211), 10.30 இரவு | திங்கள்-வெள்ளி |

ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

அமானுஷ்ய நிகழ்வுகளைச் சுற்றியுள்ள மர்மங்களை இந்நிகழ்ச்சி சித்தரிக்கின்றது.

 ரோஜா (புதிய அத்தியாயம் – 622)

சன் தொலைக்காட்சி (எச்டி அலைவரிசை 234 / அலைவரிசை 211), 7.00 இரவு | திங்கள்-வெள்ளி |

ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

கல்லூரியில் படிக்கும் போது, ​​மகேஷ் ரோஜா மற்றும் அவரது மாற்றான் சகோதரி, அஞ்சலி ஆகியோருடன் காதல் வயப்படுகிறார். இருப்பினும், அவர்கள் இருவரும் தங்களின் சுய நோக்கங்களைக் கொண்டுள்ளனர்.

ஸ்டார் விஜய்

ஆயுத எழுத்து (புதிய அத்தியாயம் – 218)

ஸ்டார் விஜய் (எச்டி அலைவரிசை 232 / அலைவரிசை 224), 6.00 இரவு / திங்கள்- சனி |

ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

சப்-கலெக்டர் இந்திராவும் காளியம்மாவும் ஒரு கிராமப் பள்ளியின் விவாதத்தினால் எதிராளிகளாகின்றனர். காளியம்மாவின் மகனான சக்திவேலை இந்திரா கட்டாயத் திருமணம் செய்து கொள்ளும்போது வாழ்க்கை எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்துகிறது.

பாக்கியலட்சுமி இல்லத்தரசியின் கதை (புதிய அத்தியாயம் – 2)

ஸ்டார் விஜய் (எச்டி அலைவரிசை 232 / அலைவரிசை 224), 6.30 மாலை | திங்கள்- சனி |

ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

சுய மரியாதையை எழுப்பும் இல்லத்தரசி பாக்கியலட்சுமியைப் பற்றிய ஒரு குடும்ப நாடகம். தன் குடும்பத்திற்காக செய்த தியாகங்களின் வெளிப்படையற்றப் பயணத்தைப் பற்றியக் கதை.

பாரதி கண்ணம்மா (புதிய அத்தியாயம் – 277)

ஸ்டார் விஜய் (எச்டி அலைவரிசை 232 / அலைவரிசை 224), 8.30 இரவு | திங்கள்- சனி |

ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

பாரதி என்ற மருத்துவர் கண்ணம்மா என்ற புத்திசாலித்தனமான, சற்று கருத்த நிறமானப் பெண்ணின்பால் காதல் வயப்படுகிறார். அப்பெண்ணின் தந்தையிடம் அவர் திருமணத்தைப் பற்றி பேசுகையில், தந்தையோ ஒரு திடுக்கிடும் இரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.

செந்தூரப் பூவே (புதிய அத்தியாயம் – 2)

ஸ்டார் விஜய் (எச்டி அலைவரிசை 232 / அலைவரிசை 224), 9.30 இரவு | திங்கள்- வெள்ளி

ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

40 வயது ஆணும் 20 வயது பெண்ணும் பற்றிய குடும்ப நாடகம். இக்கதை ஒரு முதிர்ந்த காதல் கதையை அடிப்படையாகக் கொண்டது. இரண்டு மகள்களுடன் மனைவியை இழந்த ஒருவர், தனது குழந்தைகளுக்காக மறுமணம் செய்ய ஒப்புக்கொள்கிறார். ஒரு இளம் பெண், ஒரு வயதானவரை திருமணம் செய்யத் தயக்கத்துடன் ஒப்புக்கொள்கிறாள். அவர்கள் ஒருவருக்கொருவர் காதலிப்பார்களா?

தேன்மொழி பி.ஏ. ஊராட்சி மன்றத் தலைவர் (புதிய அத்தியாயம் – 180)

ஸ்டார் விஜய் (எச்டி அலைவரிசை 232 / அலைவரிசை 224), 10.00 இரவு | திங்கள்-வெள்ளி

ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண், தேன்மொழி ஒரு தேர்தலில் கிராமத் தலைவரை தோற்கடிக்கும்போது, ​​குடும்பத்தின் நற்பெயர் அப்படியே இருப்பதை உறுதி செய்வதற்காக அவரின் மகன் அருளுக்கு அவளைத் திருமணம் செய்து வைக்கிறார்.

ZEE தமிழ் எச்டி

நீதானே எந்தன் பொன்வசந்தம் (புதிய அத்தியாயம்)

ZEE தமிழ் எச்டி (அலைவரிசை 235), 6.30 மாலை | திங்கள்-வெள்ளி |

ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

தன் மனைவி இறந்ததிலிருந்து திருமணமாகாத ஒரு வணிக அதிபர், சூர்ய பிரகாஷ், மற்றும் கீழ்-நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, கல்வியைத் தொடரும் அவரது பக்கத்து வீட்டுப் பெண் அனுவைப் பற்றியக் கதை.

கோகுலத்தில் சீதை (புதிய அத்தியாயம்  – 127)

ZEE தமிழ் எச்டி (அலைவரிசை 235), 7.30pm | திங்கள்- சனி |

ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

காதல் வயப்படும் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பொறுப்பானப் பெண் வசுந்தரா மற்றும் ஒரு செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பொறுப்பற்ற மற்றும் ஆணவம் மிகுந்த ஆண், அர்ஜுன் பற்றியக் கதை.

யாரடி நீ மோகினி (புதிய அத்தியாயம்  – 875)

ZEE தமிழ் எச்டி (அலைவரிசை 235), 8.00 இரவு | திங்கள்- சனி |

ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

வெண்ணிலாவின் தாய் மாமா, வாழ்க்கையில் ஒரு கடினமான கட்டத்தை கடந்து வருவதால், அவளது வேண்டுகோள்களை மீறி, அவளைத் திருமணம் செய்ய மறுக்கிறார். வெண்ணிலா மனம் உடைந்த நிலையில் இருக்கையில், அவளுக்குள் இருக்கும் ஆவி வேறு திட்டங்களைத் தீட்டுகிறது.

செம்பருத்தி (புதிய அத்தியாயம்  – 751)

ZEE தமிழ் எச்டி (அலைவரிசை 235), 8.30 இரவு | திங்கள்-சனி |

ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகள் காரணமாக, பார்வதி அகிலாண்டேஸ்வரியின் மூத்த மகனான ஆதித்யாவைத் திருமணம் செய்யும் நிர்பந்தத்திற்க்கு ஆளாகிறாள். பார்வதி தனது திருமணத்தைப் பற்றி யாரிடமும் சொல்லாமல், அகிலாண்டேஸ்வரியின் வீட்டில் வேலைக்காரியாக வேலை செய்கிறாள்.

ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி (புதிய அத்தியாயம்  – 580)

ZEE தமிழ் எச்டி (அலைவரிசை 235), 9.00 இரவு | திங்கள்-சனி |

ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

ராசாத்தி என்ற இனிமையான, அதிக உடல் எடையைக் கொண்ட பெண்ணைத் திருமணம் செய்வதில் வசந்த் தயங்குகிறான். கிருபையுடனும் வாழ்க்கையில் பல சவால்களை எதிர்த்து வெற்றிக் கொள்வதை அவனது பயம் தடுக்கவில்லை.

சத்யா (புதிய அத்தியாயம்  – 336)

ZEE தமிழ் எச்டி (அலைவரிசை 235), 9.30 இரவு | திங்கள்-சனி |

ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

எதிர்ப்பாராத சூழ்நிலை காரணமாக ஒரு தலைசிறந்த பெண், சத்யா, பிரபுவை திருமணம் செய்து கொள்ள நிர்பந்தப்படுத்தப்படுகிறாள். இருப்பினும், ஆரம்ப வேறுபாடுகளுக்குப் பிறகு அவர்கள் இருவரும் இணைகின்றனர். பிரபு சத்யாவின் கனவுகளை நிறைவேற்ற உதவுகிறார்.

பின்குறிப்பு : மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் இறுதிநேர மாற்றத்திற்கு உட்பட்டவை