Home One Line P2 ‘ராகா ஐடல்’ போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்

‘ராகா ஐடல்’ போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்

1040
0
SHARE
Ad
பட விவரம் (இடமிருந்து வலம்): சுப்பிரமணியம் வீராசாமி, உள்ளடக்க மேலாளர், ராகா, ஆஸ்ட்ரோ வானொலி; யுவனேஷ் முனியாண்டி, ‘ராகா ஐடல்’ முதல் நிலை வெற்றியாளர்; ஹரிணி , ஹரா ஆர்கானிக் (Hara Organic) தோற்றுனர் (Founder) மற்றும் ‘ராகா ஐடல்’ போட்டியின் நிதி வழங்குநர் (Sponsor).

கோலாலம்பூர் : ராகா வானொலி நடத்திய “ராகா ஐடல்” போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறந்த 3 போட்டியாளர்கள் மொத்த ரொக்கப் பரிசாக சுமார் RM3500ஐ தட்டிச் சென்றனர்.

‘ராகா ஐடல்’ போட்டியின் வெற்றியாளர்கள் :

  • ‘ராகா ஐடல்’ பாடல் திறன் போட்டியின் சிறந்த மூன்று வெற்றியாளர்கள் சமீபத்தில் நடைபெற்ற பிரமாண்டமான இறுதிச் சுற்றில் நீதிபதிகளாகப் பங்காற்றிய உள்ளூர் இசை இயக்குனர்களான சுந்தரா, ஜெய் & போய் ராட்ஜ் ஆகியோரால் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.
  • முதல் நிலை வெற்றியாளராக வாகை சூடிய யுவனேஷ் முனியாண்டி, சாம்பியன் பட்டத்தை வென்றதோடு சுமார் RM2000 ரொக்கப் பரிசையும் தட்டிச் சென்றார். உள்ளூர் இசை இயக்குனர், சுந்தராவுடன் தனது முதல் பாடலைப் பதிவுசெய்யும் அரிய வாய்ப்பையும் பெற்றார்.

  • இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வெற்றியாளர்களான சக்தீஸ்வர் சண்முகவேலாயுதம் மற்றும் அமோஸ் போல் முருகேஷ் இருவரும் முறையே RM1000 மற்றும் RM500 ரொக்கப் பரிசை வென்றதோடு உள்ளூர் இசை இயக்குனர்களான, ஜெய் மற்றும் போய் ராட்ஜ் உடன் தங்களது முதல் பாடலைப் பதிவு செய்வதற்கான வாய்ப்பைப் பெற்றனர்.
  • ‘ராகா ஐடல்’ போட்டியின் இறுதிச் சுற்றை ராகா அறிவிப்பாளர்களான, சுரேஷ், அஹிலா, ரேவதி, உதயா, கோகுலன், மற்றும் மாறன் ஆகியோர் தொகுத்து வழங்க ஹரா ஆர்கானிக் (Hara Organic) நிதியுதவி வழங்கி ஆதரவளித்தனர்.
#TamilSchoolmychoice

• மேல் விபரங்களுக்கு, ராகாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.
ராகாவைப் பின்தொடர:

raaga.my

இலவச SYOK செயலியை உடனே பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!

www.facebook.com/RAAGA.my

www.instagram.com/raaga.my

https://www.youtube.com/channel/UCj3Rr8EGakWWoU6Su4KWidw

வானொலி வழி (ஆன்-ஏரில்) கேளுங்கள்.

இடம் அதிர்வெண்கள்
கிள்ளான் பள்ளத்தாக்கு 99.3FM
அலோர்ஸ்டார் 102.4FM
பினாங்கு 99.3FM
ஈப்போ 97.9FM
சிரம்பான் 101.5FM
மலாக்கா 99.7FM
ஜொகூர் / ஜேபி 103.7FM
தைப்பிங் 102.1FM
லங்காவி 101.9FM
ஆஸ்ட்ரோ அலைவரிசை 859