Home One Line P2 ‘ராகா ஐடல்’ பாடல் திறன் போட்டியின் சிறந்த 5 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

‘ராகா ஐடல்’ பாடல் திறன் போட்டியின் சிறந்த 5 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

768
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ‘ராகா ஐடல்’ பாடல் திறன் போட்டியின் சிறந்த 5 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்கான இறுதிச் சுற்றை எதிர்வரும் செப்டம்பர் 6, மாலை 3 மணிக்கு ராகாவின் முகநூல் நேரலையில் கண்டுக் களிக்கலாம்.

‘ராகா ஐடல்’ பாடல் திறன் போட்டியின் சிறந்த 5 போட்டியாளர்கள்

• ‘ராகா ஐடல்’ பாடல் திறன் போட்டியின் சிறந்த 5 போட்டியாளர்கள் 24 முதல் 31 ஆகஸ்ட் 2020 வரை நடைபெற்ற இணைய வாக்களிப்புகளுக்குப் பின் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தத் திறமையான போட்டியாளர்கள் பெறப்பட்ட சுமார் 700 விண்ணப்பங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

• சிறந்த 5 போட்டியாளர்களான கமலி கண்ணன், சக்தீஸ்வர் சண்முகவேலாயுதம், தர்ஷினி முரளி, அமோஸ் போல் முருகேஷ் மற்றும் யுவனேஷ் முனியாண்டி ஆகியோர் 6 செப்டம்பர் 2020, மாலை 3 மணிக்கு நடைபெறும் இறுதி சுற்றில் களமிறங்கி போட்டியிடுவர். ராகாவின் முகநூல் நேரலை வழியாக இரசிகர்கள் இறுதிச் சுற்றை பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்யலாம்.

#TamilSchoolmychoice

• இறுதிச் சுற்றில் அதிக மதிப்பெண்களைப் பெரும் மூன்று போட்டியாளர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு மொத்தம் RM3500 ரொக்கப் பரிசை வீட்டிற்கு எடுத்துச் செல்வர்.

• பிரபல உள்ளூர் இசை இயக்குநர்களான சுந்தரா, ஜெய் மற்றும் போய் ராட்ஜ் உடன் ஒரு பாடலைப் பதிவு செய்வதற்கான வாய்ப்பையும் வெற்றியாளர்கள் பெறுவர்.

• மேல் விவரங்களுக்கு, ராகாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.
ராகாவைப் பின்தொடர:

raaga.my

இலவச SYOK செயலியை உடனே பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!

www.facebook.com/RAAGA.my

www.instagram.com/raaga.my

https://www.youtube.com/channel/UCj3Rr8EGakWWoU6Su4KWidw

வானொலி வழி (ஆன்-ஏரில்) கேளுங்கள்.

 

இடம் அதிர்வெண்கள்
கிள்ளான் பள்ளத்தாக்கு 99.3FM
அலோர்ஸ்டார் 102.4FM
பினாங்கு 99.3FM
ஈப்போ 97.9FM
சிரம்பான் 101.5FM
மலாக்கா 99.7FM
ஜொகூர் / ஜேபி 103.7FM
தைப்பிங் 102.1FM
லங்காவி 101.9FM
ஆஸ்ட்ரோ அலைவரிசை 859