Home One Line P2 திமுக : துரைமுருகன், பொதுச் செயலாளர்; டி.ஆர்.பாலு பொருளாளர்!

திமுக : துரைமுருகன், பொதுச் செயலாளர்; டி.ஆர்.பாலு பொருளாளர்!

985
0
SHARE
Ad

சென்னை : இன்று வியாழக்கிழமை (செப்டம்பர் 3) நடைபெற்ற திமுக தேர்தலில் துரைமுருகன் பொதுச் செயலாளராகவும், டி.ஆர்.பாலு பொருளாளராகவும் போட்டியின்றி தேர்வு பெற்றனர்.

கட்சியின் அமைப்புச் செயலாளர் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்தப் பதவிகளுக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

#TamilSchoolmychoice

திமுகவின் பொதுக்குழு கூட்டம், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு  கட்சியின் பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு புதிய பொறுப்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் திமுக தலைமையகத்தில் இன்று நடைபெற்றது.

திமுகவின் பொதுச் செயலாளராக கடந்த காலங்களில் அண்ணாதுரை, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் பதவி வகித்திருக்கின்றனர்.

“கட்சியின் அடிமட்டத் தொண்டனாக இருந்து இவ்வளவு பெரிய பதவிக்கு வந்துள்ளது பயம் கலந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என தேர்வுக்குப் பின்னர் பேசிய துரைமுருகன் கூறினார்.

கடந்த காலங்களில் எம்ஜிஆர், மு.க.ஸ்டாலின் போன்றவர்கள் திமுக பொருளாளர் பதவியை வகித்திருக்கின்றனர்.