Home One Line P2 திமுக பொருளாளர் பதவியிலிருந்து துரைமுருகன் விலகல், பொதுச் செயலாளராக பதவி ஏற்பார்!

திமுக பொருளாளர் பதவியிலிருந்து துரைமுருகன் விலகல், பொதுச் செயலாளராக பதவி ஏற்பார்!

749
0
SHARE
Ad

சென்னை: திமுகவின் பொருளாளராக இருக்கும் துரைமுருகன் தற்போது அப்பதவியிலிருந்து விலகியுள்ளார். மேலும், அவர் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

அண்மையில், திமுகவின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்த பேராசிரியர் க. அன்பழகன் காலமானதைத் தொடர்ந்து அக்கட்சிக்குப் புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்ய திமுக முடிவெடுத்துள்ளது.

அதன்படி, வருகிற 29-ஆம் தேதி, கட்சியின் புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கட்சியின் பொதுச் செயலாளராக துரைமுருகன் பதவி வகிக்க எண்ணம் கொண்டிருப்பதால், அவர் அப்பதவியை வகிப்பார் என்று கூறப்படுகிறது.

பொருளாளர் பதவிக்கு கட்சியின் மூத்த உறுப்பினர்களான டி.ஆர்.பாலு, எ.வ.வேலு மற்றும் பொன்முடி ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.