Home One Line P1 கல்வி நிறுவனங்கள் ஒரு மாதத்திற்கு மூடப்பட வேண்டும்!- முன்னாள் துணை சுகாதார அமைச்சர்

கல்வி நிறுவனங்கள் ஒரு மாதத்திற்கு மூடப்பட வேண்டும்!- முன்னாள் துணை சுகாதார அமைச்சர்

574
0
SHARE
Ad

 

கோலாலம்பூர்: கொவிட் -19 விளைவின் தீவிரத்தை குறைப்பதில் கவனம் செலுத்துமாறு அரசாங்கத்திற்கு முன்னாள் துணை சுகாதார அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் அழைப்பு விடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

தற்போதைய சம்பவங்கள் மற்றும் நெருங்கிய தொடர்புகள் கண்டறியப்படுவதற்கும் தனிமைப்படுத்தப்படுவதற்கும் அனுமதிக்க முடியாத அளவுக்கு அதிகமாக இருப்பதாக அவர் நேற்று தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

“சம்பவங்கள் மற்றும் நெருங்கிய தொடர்புகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது, அவற்றைக் கண்டறிந்து தனிமைப்படுத்துவது சுகாதார அமைச்சகத்திற்கு சாத்தியமில்லை.”

“எனவே, இனி தடுத்து வைத்திருப்பது சாத்தியமில்லை” என்று அவர் கூறினார்.

“நாம் தணித்தல், வழக்குகளின் எண்ணிக்கையை குறைத்தல் மற்றும் சுகாதார வளங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.

மேலும், இந்த தொற்றுநோயை சமாளிக்க அமைச்சகம் அதிக ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நேற்று மலேசியாவில் 190 சம்பவங்கள் அதிகரித்து மொத்தம் 428 சம்பவங்கள் பதிவானதை அடுத்து லீ இந்த அறிக்கையை வெளியிட்டார்.

பிப்ரவரி 27 முதல் மார்ச் 1 வரை கோலாலம்பூரில் உள்ள செரி பெட்டாலிங் மசூதியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களுடன் பெரும்பாலான புதிய சம்பவங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 14,500 மலேசியர்கள் கலந்து கொண்டனர்.

கல்வி நிறுவனத்தின் வளாகத்தை ஒரு மாதத்திற்கு மூடுமாறு அவர் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார்.

“பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பாலர் பள்ளிகள் ஒரு மாதத்திற்கு மூடப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.

“அனைத்து மத, சமூக, விளையாட்டு நடவடிக்கைகள் உட்பட ஒரு மாதத்திற்கு ஒன்றுகூடலை நிறுத்துங்கள்” என்று லீ மேலும் கூறினார்.