Home Uncategorized ஹாலிவுட் நடிகர் “ராக்” டுவெய்ன் ஜான்சன் குடும்பத்தினருக்கு கொவிட்-19 தொற்று

ஹாலிவுட் நடிகர் “ராக்” டுவெய்ன் ஜான்சன் குடும்பத்தினருக்கு கொவிட்-19 தொற்று

580
0
SHARE
Ad

ஹாலிவுட் : “ராக்” என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் பிரபல ஹாலிவுட் நடிகர் டுவெய்ன் ஜான்சன் தனது குடும்பத்தினருக்கு கொவிட்-19 தொற்று கண்டிருப்பதாக அறிவித்திருக்கிறார்.

தனது மனைவியும் இரு மகள்களும் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டதாக இன்று வியாழக்கிழமை (செப்டம்பர் 3) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட காணொளி வழி அவர் அறிவித்தார்.

மூன்று வாரகால போராட்டத்திற்குப் பின்னர் கொவிட்-19 தொற்றிலிருந்து தாங்கள் மீண்டதாகவும் டுவெய்ன் ஜான்சன் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

4 வயது மற்றும் 2 வயதுடைய இரு மகள்களுக்கும் லேசான தொண்டை அழற்சி போன்ற சிறிய அளவிலான பாதிப்புகள் இருந்தன என 48 வயதான டுவெய்ன் ஜோன்சன் குறிப்பிட்டார்.

ஆனாலும், தானும் தனது மனைவியும் கடுமையான பாதிப்புக்குள்ளானதாக அவர் கூறினார்.

“தற்போது முற்றிலும் குணமடைந்திருக்கிறோம். உடல் நலத்துடன் இருக்கிறோம். கொவிட்-19 தொற்று மூலம் மேலும் வலிமையுடனும், உடல் நலத்துடன் தேறியிருக்கிறோம்” என டுவெய்ன் ஜான்சன் பதிவிட்டார்.

அமெரிக்காவையே கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியிருக்கும் கொவிட்-19 தொற்று பல ஹாலிவுட் பிரபலங்களையும் தாக்கியிருக்கிறது.

பிரபல பாடகியும் நடிகையுமான மடோன்னாவும் ஒருமுறை கொவிட்-19 பாதிப்புக்குள்ளானதாக சமூக ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.

அந்த வரிசையில் தற்போது மிகுந்த பலசாலி நடிகராகப் பார்க்கப்படும் டுவெய்ன் ஜான்சனையே பாதித்திருக்கிறது.