Home One Line P2 கொவிட்-19: ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பா பாதிப்பு!

கொவிட்-19: ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பா பாதிப்பு!

629
0
SHARE
Ad

பிரிட்டன்: கொவிட்-19 நோய்த்தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பா உறுதிப்படுத்தியுள்ளார்.

டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவில், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த  நட்சத்திரமான அவர் எந்த அறிகுறிகளையும் அனுபவிக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

 வைரஸ் கண்டிருப்பவருடன் தொடர்பு கொண்டிருந்ததால் அவருக்கு இந்த பாதிப்பு வந்ததாக  அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“வீட்டிலேயே இருங்கள். எனது உடல்நிலை குறித்து உங்களுக்கு அவ்வப்போது தெரிவிக்கிறேன். பீதி அடைய வேண்டாம், ”என்று அவர் விளக்கினார்.

வெள்ளிக்கிழமை, நேர்மறையான முடிவுகளைத் தொடர்ந்து, இட்ரிஸ் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், உடனடி சோதனைகளுக்கு உட்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், வைரஸ் பரவாமல் தடுக்க சமூக பணிகள் மற்றும் சுகாதாரத்தை பராமரிக்க அனைவருக்கும் அவர் அறிவுறுத்தினார்.

“நாங்கள் பிளவுபட்ட உலகில் வாழ்கிறோம். இருப்பினும், இப்போது பலப்படுத்த, மற்றவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் (இந்த வைரஸின் விளைவாக), “என்று அவர் கூறினார்.