
புது டில்லி: நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவது தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வந்த நிலையில், வருகிற வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு (இந்திய நேரப்படி) தூக்குத் தண்டனை நிறவேற்ற நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
இதனிடையே, திடீர் திருப்பமாக குற்றவாளிகள் தங்களுக்கு வழங்கப்படவுள்ள தண்டனையை எதிர்த்து அனைத்துலக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
வரும் வெள்ளியன்று மரண தண்டனை அவர்களுக்கு நிறைவேற்றப்படவுள்ள நிலையில் அதனை நிறுத்தி வைக்கும் முயற்சியாக அவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நான்கு பேரில் 3 பேருக்கு ஏற்கனவே குடியரசு தலைவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு விட்டது. 4-வது நபரான பவன் குப்தாவின் மனுவையும் குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார். இதனால் அவர்கள் தப்பிப்பதற்கு வேறு வழியே இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.