Home One Line P2 நிர்பயா கொலைவழக்கு குற்றவாளிகள் 4 பேர்களும் தூக்கிலிடப்பட்டனர்

நிர்பயா கொலைவழக்கு குற்றவாளிகள் 4 பேர்களும் தூக்கிலிடப்பட்டனர்

812
0
SHARE
Ad

புதுடில்லி – 2012-இல் நடைபெற்ற நிர்பயா பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் இன்று வெள்ளிக்கிழமை காலை 4.00 மணியளவில் தூக்கிலிடப்பட்டனர்.

கடந்த 8 ஆண்டுகளாக அந்த நால்வரும் நடத்தி வந்த நீதிமன்றப் போராட்டம் ஒருவழியாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.

“எனது மகளுக்கு மட்டுமல்ல! இந்தியாவில் உள்ள அனைத்து பெண்களுக்கும் நீதி கிடைத்திருக்கிறது” என நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நேற்று டெல்லி உயர்நீதிமன்றம் அவர்களின் தூக்குத் தண்டனையை மறுஉறுதி செய்ததைத் தொடர்ந்து அவர்களின் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அந்த நால்வரும் அனைத்துலக நீதிமன்றத்திற்கு விண்ணப்பம் செய்திருந்தாலும், அந்த விண்ணப்பத்தை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் தூக்குத் தண்டனையை நிறைவேற்றியிருக்கிறது.