Home One Line P2 நிர்பயா கொலை வழக்கு – நால்வரின் தூக்குத் தண்டனை மீண்டும் ஒத்திவைப்பு

நிர்பயா கொலை வழக்கு – நால்வரின் தூக்குத் தண்டனை மீண்டும் ஒத்திவைப்பு

684
0
SHARE
Ad

புதுடில்லி – நாளை செவ்வாய்க்கிழமை மார்ச் 3-ஆம் தேதி நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நால்வரின் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், அந்தத் தண்டனை டில்லி உயர் நீதிமன்றத்தால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டில்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதியன்று, மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நால்வருக்கு மார்ச் மாதம் 3-ஆம் தேதி காலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி) தூக்கிலிடுவதற்கு டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அவர்களின் தண்டனை நிறைவேற்றம் ஒத்தி வைக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

#TamilSchoolmychoice

தண்டனை விதிக்கப்பட்ட நால்வரில் ஒருவரான பவான் குப்தா, அதிபர் ராம்நாத் கோவிந்துக்கு சமர்ப்பித்த கருணை மனு மீதான முடிவை அதிபர் இன்னும் எடுக்கவில்லை என்பதால் அவர்கள் தங்களின் அனைத்து சட்ட வாய்ப்புகளையும் இன்னும் இழந்து விடவில்லை என டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி தனது ஒத்தி வைப்புக்கான காரணமாகத் தெரிவித்திருக்கிறார்.

அக்சய் தாக்கூர் (வயது 31), பவான் குப்தா (வயது 25), வினய் ஷர்மா (வயது 26), முகேஷ் சிங் (வயது 32) ஆகிய நால்வருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும், அடுத்தடுத்து தங்களின் மேல்முறையீடுகள், கருணை மனுக்கள் மூலமாக தங்களின் தண்டனை நிறைவேற்றத்தை அவர்கள் ஒத்தி வைத்து வருகிறார்கள்.