Home Uncategorized 1எம்டிபி ஊழல் பணத்தை மீட்பதற்கான முயற்சிகள் முடுக்கி விடப்படும் – மொகிதின்

1எம்டிபி ஊழல் பணத்தை மீட்பதற்கான முயற்சிகள் முடுக்கி விடப்படும் – மொகிதின்

607
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – அனைத்து 1எம்டிபி நிதிகளை வெளிநாடுகளில் இருந்து மீட்பதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட வேண்டுமென  பிரதமர் மொகிதின் யாசின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த விவகாரத்தை பிரதமர் அலுவலகம் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் அறிவித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, இந்த விவகாரத்திற்கு பொறுப்பான சிறப்பு பணிக்குழுவால் மொகிதினுக்கு சிறப்பு விளக்கம் அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தது.

#TamilSchoolmychoice

” மொத்தம் 1.4 பில்லியன் ரிங்கிட் நிதி பணிக்குழுவால் மீட்கப்பட்டுள்ளதாக பிரதமருக்கு அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் மற்றொரு 6.9 பில்லியன் ரிங்கிட் அடையாளம் காணப்பட்டுள்ளது. 17 நாடுகளில் அதிகார அத்துமீறலுக்கு ஆளானதாக சந்தேகிக்கப்படும் 1எம்டிபி நிதியை திரும்பக் கொண்டுவர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பணிக்குழு விவரித்தது. பல்வேறு நாடுகளிலிருந்து 1எம்டிபி நிதியைக் கண்டுபிடித்து மீட்டெடுக்கும் முயற்சிகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம், அப்போதைய வழக்கறிஞர் டோமி தோமஸ் 1எம்டிபி நிதியில் 1.5 பில்லியன் ரிங்கிட் திரும்பப் பெறப்பட்டதாக அறிவித்தார்.

இது அமெரிக்காவில் சொத்துகளை பெறுவதற்காக தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 1.355 பில்லியன் ரிங்கிட் நிதிகளையும், சிங்கப்பூரிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 152.3 மில்லியன் ரிங்கிட் நிதிகளையும் உள்ளடக்கியது என்று அவர் கூறினார்.

மார்ச் 6-ஆம் தேதி, அமெரிக்க நீதித்துறை, மலேசியாவில் ஏற்பட்ட அரசாங்க மாற்றத்தைத் தொடர்ந்து, 1எம்டிபியிலிருந்து மோசடி செய்யப்பட்ட நிதியில் 240 மில்லியன் அமெரிக்க டாலர்களை திருப்பித் தருவதாக அறிவித்திருந்தது.