Home One Line P1 கொவிட்-19: மலேசியாவில் இருவர் மரணம்!

கொவிட்-19: மலேசியாவில் இருவர் மரணம்!

513
0
SHARE
Ad

கோலாலம்பூர்:  மலேசியாவில் மேலும் 120 புதிய கொவிட்-19 சம்பவங்கள் இன்று செவ்வாய்க்கிழமை பதிவாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரையில் மொத்தமாக 673 சம்பவங்கள் கொவிட்-19 பாதிப்புத் தொடர்பாக  பதிவாகியுள்ளன.

புதிய சம்பவங்களில் பாதிக்கப்பட்ட 95 பேர் ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்றும்அமைச்சு கூறியது.  இதற்கிடையில், 7 நோயாளிகள் இந்த பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளதாக அது தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மலேசியாவில் முதல் இரண்டு மரணங்கள் கொவிட்-19 தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

ஸ்ரீ பெட்டாலிங் கூட்டத்தில் கலந்துக் கொண்ட 34 வயது நபருக்கு,  மார்ச் 5-ஆம் தேதி  இந்த நோய் கண்டிருப்பது  கண்டறியப்பட்டது.  பிறகு மார்ச் 12-ஆம் தேதியன்று பெர்மாய் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார். அவரது உடல்நிலை மோசமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டார்.  இன்று அவர்  இறந்ததாக  உறுதி செய்யப்பட்டது.

இரண்டாவது சம்பவத்தில், சரவாக் கூச்சிங்கில் 60 வயது போதகர் ஒருவர் கொவிட் -19 பாதிப்பு தொடர்பாக மரணமுற்றார். இன்று காலை 11 மணிக்கு சரவாக் பொது மருத்துவமனையில் அவர் காலமானார் என்று சரவாக் மாநில பேரிடர் மேலாண்மை குழு (ஜேபிபிஎன்) தெரிவித்துள்ளது.

“நோய்த்தொற்றின் மூலத்தை அடையாளம் காணும் பணியில் மாநில சுகாதாரத் துறை இன்னும் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில், இறந்தவரின் 193 நெருங்கிய தொடர்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் அவர்கள்  வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுத்தப்பட்டுள்ளனர்” என்று ஜேபிபிஎன் சரவாக் இன்று ஓர்  அறிக்கையில் தெரிவித்துள்ளது.