Home One Line P1 மார்ச் 18 முதல் 31 வரை அனைத்து கோயில்களும் மூடப்பட வேண்டும்!- மலேசிய இந்து சங்கம்

மார்ச் 18 முதல் 31 வரை அனைத்து கோயில்களும் மூடப்பட வேண்டும்!- மலேசிய இந்து சங்கம்

720
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மார்ச் 18 முதல் மார்ச் 31 வரை விதிக்கப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள அனைத்து இந்து மத வழிபாட்டுத் தலங்களையும் மூட மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

கொவிட் -19 பாதிப்பைத் தொடர்ந்து இந்த முடிவு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று அதன் தலைவர் ஆர்.எஸ்.மோகன் ஷான் கூறினார்.

“இந்த நேரத்தில், கும்பாபிஷேகம் (சடங்கு விழாக்கள்), ஆண்டு விழாக்கள், சிறப்பு பிரார்த்தனைகள், திருமணங்கள் உள்ளிட்ட எந்த கோவில் விழாக்களும் ஒத்திவைக்கப்பட வேண்டும். இருப்பினும், மக்கள் இல்லாமல் தினசரி வழிபாடுகள் நடத்தப்பட கோயில் அனுமதிக்கப்படுகிறது,” என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நேற்று, பிரதமர் மொகிதின் யாசின் மார்ச் 18 முதல் மார்ச் 31 வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அறிவித்தார்.

கொவிட் -19 பரவுவதைத் தடுப்பதில் இந்த நடவடிக்கை முக்கியமானது என்றும், பொது பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை கணக்கில் எடுத்துக்கொள்வதற்கான அரசாங்கத்தின் முடிவை மதிக்க வேண்டும் என்றும் மோகன் கூறினார்.