Home One Line P2 கொவிட் – 19 : பாடகி மடோன்னாவையே பாதித்ததா?

கொவிட் – 19 : பாடகி மடோன்னாவையே பாதித்ததா?

747
0
SHARE
Ad

ஹாலிவுட் – 61 வயதைக் கடந்த நிலையிலும் இன்னும் இசைத் துறையில் புகழுடன் திகழ்ந்து வருபவர் மடோன்னா. ஒரு காலத்தில் ஹாலிவுட்டிலும் கவர்ச்சித் தாரகையாக உலா வந்தவர்.

இன்னும் இவரது மேடை நிகழ்ச்சிகளுக்கென இலட்சக்கணக்கில் திரளும் இரசிகர்கள் உள்ளனர். மேடையில் இவரது ஆட்டமும் பாட்டமும் இரசிகர்களையும் துள்ளாட்டம் போட வைக்கும்.

ஏழை, பணக்காரன், அரச குடும்பத்தினர், பிரதமர்கள் என யாரையும் விட்டு வைக்காத கொவிட்-19 நச்சுயிரி அழகான மடோன்னாவையும் தாக்கியுள்ளது.

#TamilSchoolmychoice

தனக்கு கொவிட்-19 பாதிப்பு இருப்பதாக பரிசோதனையின் வழி கண்டறியப்பட்டிருப்பதாக மடோன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறைமுகமாகப் பதிவிட்டுள்ளார்.

“பரிசோதனை செய்து கொண்டேன். எனக்கு உடலில் கொவிட்-19 பாதிப்புகள் இருப்பதைக் கண்டறிந்திருக்கிறேன்” என்று அவர் தனது பதிவில் தெரிவித்தார்.

“எனினும் நாளை காரில் நீண்ட பயணம் செல்லவிருக்கிறேன். கார் கண்ணாடிகளை இறக்கிவிட்டு வெளிக்காற்றை சுவாசிக்கவிருக்கிறேன். கொவிட்-19 காற்றை சுவாசிக்கவிருக்கிறேன்” என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே, கொவிட்-19 அனைவரும் சமம் என்பதை உலகுக்கு உணர்த்தியிருக்கிறது என்றும் மடோன்னா பதிவிட்டிருந்தார்.

கொவிட்-19 தொற்று காரணமாக மடோன்னா பாரிஸ் நகரில் நடத்தவிருந்த இரண்டு பிரம்மாண்டமான மேடை இசை நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

“மேடம் எக்ஸ்” (Madame X world tour) என்ற பெயரிலான தனது இசை நிகழ்ச்சியை அமெரிக்க நகர்களில் நடத்தி முடித்த அவர் வெளிநாடுகளில் அந்த இசை நிகழ்ச்சியைத் தொடரவிருந்த வேளையில் கொவிட்-19 பாதிப்பால் அந்த நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டிருக்கின்றன.