Home One Line P1 வணிகங்களுக்காக உணவகங்கள் கட்டுப்பாடுகளுடன் மே 4 முதல் திறக்கப்படுகின்றன

வணிகங்களுக்காக உணவகங்கள் கட்டுப்பாடுகளுடன் மே 4 முதல் திறக்கப்படுகின்றன

810
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – எதிர்வரும் மே 4-ஆம் தேதி முதல் கொவிட்-19 தொடர்பான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு மீதிலான சில தளர்வுகள் அனுமதிக்கப்படுவதாக பிரதமர் மொகிதின் யாசின் இன்று விடுத்த தொழிலாளர் தின செய்தியில் தெரிவித்திருந்தார்.

அதன் ஒரு பகுதியாக மே-4 முதல் உணவகங்கள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட அனுமதிக்கப்படுகின்றன. மேசைகளுக்கிடையில் 2 மீட்டம் இடைவெளி, ஒரு மேசைக்கு இத்தனை நபர்களுக்குத்தான் அனுமதி, ஒரே நேரத்தில் உணவகத்தில் அமர்ந்து உணவருந்தக் கூடிய நபர்களுக்கான உச்சவரம்பு அறிவிப்பு, கட்டணம் செலுத்தும் இடத்தில் ஒவ்வொரு நபருக்கும் இடையில் ஒரு மீட்டர் இடைவெளி, கட்டண முகப்புகளில் கிருமி நாசினி திரவம் வைத்தல், மேசைகளை அடிக்கடி சுத்தம் செய்து கிருமிநாசினி தெளித்தல், பணியாளர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிவித்தல், என்பது போன்ற பல நிபந்தனைகளை உணவக உரிமையாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

மேலும் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் பெயர், தொலைபேசி, தங்குமிட முகவரி, அவர்கள் வந்து சென்ற நேரம் போன்ற விவரங்கள் பெறப்பட வேண்டும்.

#TamilSchoolmychoice

உணவகத்தில் நுழைவதற்கு முன்னர் வாடிக்கையாளர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்பது போன்ற சோதனைகளும் வெப்பமானியைக் கொண்டு சோதிக்கப்பட வேண்டும்.