Home இந்தியா திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்

திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்

1225
0
SHARE
Ad

சென்னை – மு.க.ஸ்டாலின் திமுக தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து கட்சியின் பொறுப்பாளர்கள் சிலரை மாற்றி வருகிறார். அதன் தொடர்பில் முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு (படம்) திமுகவின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதற்கு முன்பு அந்தப் பொறுப்பில் துரை முருகன் இருந்து வந்தார். அவர் கட்சியின் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து காலியாக இருக்கும் அந்தப் பொறுப்புக்கு தற்போது டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டிருக்கிறார்.

நியமனம் அறிவிப்பு வெளியானதும் டி.ஆர்.பாலு கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

#TamilSchoolmychoice

தனது புதிய பதவி நியமனத்திற்காக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட டி.ஆர்.பாலு, என்றும் ஸ்டாலினுக்கும் கட்சிக்கும் விசுவாசமாக இருந்து வருவேன் என்றும் அறிவித்தார்.