Home One Line P1 மலாய் பெண்மணியின் செயல் மலேசியர்களால் பாராட்டப்படுகிறது

மலாய் பெண்மணியின் செயல் மலேசியர்களால் பாராட்டப்படுகிறது

668
0
SHARE
Ad

ஈப்போ: ஈப்போவில் மலாய் பெண்மணி ஒருவரின் செயல் முகநூலில் மலேசியர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. வயதான இந்திய மூதாட்டிக்கு சூரிய வெளிச்சத்திலிருந்து பாதுகாக்க மறைத்து உதவி உள்ளார்.

அம்மூதாட்டியின் பேத்தியான, ப்ரிவிதா தனது முகநூலில் இப்படத்தை பதிவேற்றியுள்ளார். அதில் அந்த மலாய் பெண்மணி ஒரு கோப்பைப் பயன்படுத்தி தனது பாட்டியை மறைத்துள்ளார். அப்பெண்மணிக்கு அவர் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்.

“பாட்டி மற்றும் குடும்பத்தின் சார்பாக அவருக்கு நன்றி கூறுகிறேன். நீண்ட நேரம் காத்திருந்தபோது, ​​என் பாட்டிக்கு ஒரு கோப்பை வைத்து மறைத்த மலாய் பெண்மணிக்கு நன்றி கூற இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன்.

#TamilSchoolmychoice

“நான் ஏன் இந்தப் படத்தைப் பகிர்ந்து கொண்டேன்? இந்நேரத்தில், இனங்களுக்கிடையில் ஒருபோதும் பாகுபாடு காட்டாத மற்றும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த மூத்த குடிமக்களை மதிக்கும் மக்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கவே இதனை பகிர்ந்தேன்,” என்று அவர் தமது இடுகையில் கூறியுள்ளார்.

ஈப்போவில் ஒரு வங்கியின் நடைபாதையில் வரிசையாக நிற்கும்போது, ​​ஒரு மலாய் பெண் தமது கையில் இருந்த கோப்பை வைத்து வயதானவரை மறைக்கும் காட்சி பலரது கவனத்தைப் பெற்றது.