Home One Line P1 லங்காவி அனைத்துலக விமான நிலையம் சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது

லங்காவி அனைத்துலக விமான நிலையம் சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது

625
0
SHARE
Ad

லங்காவி: லங்காவி அனைத்துலக விமான நிலையம் உலகின் ஏழு சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏர்போர்ட்ஸ் கவுன்சில் இன்டர்நேஷனல் (ஏ.சி.ஐ) டைரக்டர் ஜெனரல்ஸ் ரோல் ஆப் எக்ஸலன்சில் அது இந்த ஆண்டு இணைய உள்ளது.

இந்நிறுவனம் நடத்திய பயணிகளின் கருத்துக் கணிப்புகளின்படி, லங்காவி விமான நிலையம் சிறந்த வாடிக்கையாளர் சேவைகள் மற்றும் வசதிகளை தொடர்ந்து வழங்குவதற்காக சேர்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அங்கீகாரம் பெற்ற இந்த அங்கீகாரத்தால் பெருமைக் கொள்வதாக மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முகமட் சுக்ரி முகமட் சல்லே ஓர் அறிக்கையில் கூறினார்.

#TamilSchoolmychoice

“விமான நிலையத்தில் மிக உயர்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்துவதாலும், பயணிகளின் அனுபவம் சமரசம் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்வதாலும், விமானப் பயணத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் பெறுவதை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.

விமான நிலையம் தொடர்ந்து வாடிக்கையாளர் சேவைக்கு அதிக மதிப்பெண்களைப் பெற்றது மற்றும் வட்டாரத்தின் சிறந்த சிறிய விமான நிலையம், சிறிய அளவின் சிறந்த விமான நிலையம் போன்ற விருதுகளை வென்றது.

ஐந்தாண்டு காலப்பகுதியில் பல விமான சேவை சேவை தர விருதுகளின் தட பதிவின் அடிப்படையில் இது டைரக்டர் ஜெனரல்ஸ் ரோல் ஆப் எக்ஸலன்ஸசில் சேர்க்கப்பட்டுள்ளது.