Home வணிகம்/தொழில் நுட்பம் மலேசியா, சென்னை நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் : ரஷ்யாவில் எண்ணெய் உற்பத்தி

மலேசியா, சென்னை நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் : ரஷ்யாவில் எண்ணெய் உற்பத்தி

1017
0
SHARE
Ad

Chennai-VT-Oil-MOUசென்னை,ஜன.26 – மலேசியாவை சேர்ந்த ஈ பி சி ஆயில் அண்ட் கேஸ் நிறுவனம் சென்னையை சேர்ந்த இந்திய பன்னாட்டு நிறுவனமான வி.டி. குருப் உடன்  புரிந்துணர்வு ஒப்பந்தம்  செய்து கொண்டுள்ளது. இந்த நீண்ட கால ஒப்பந்தத்தின் படி ரஷ்யாவில் உள்ள ஆறு எண்ணெய் தொகுதிகளை நிர்வகிக்கவும், இயக்கவும் இரு நிறுவனங்களும் முடிவு செய்து உள்ளன. ரஷ்யாவில் உள்ள சரதோவ் நகரில் உள்ள இந்த எண்ணெய் தொகுதிகள் வருங்காலத்தில் உலக அளவில் எண்ணெய் தேவைக்கு தீர்வாக அமையும்.

ரஷ்ய நாட்டில் அமைத்துள்ள இந்த  சரதோவ் பகுதியில் நீண்ட காலமாக எண்ணெய் வளம் உள்ளது. இதில் 25 சதவித அளவிற்கே எண்ணெய் தாங்கி கட்டமைப்புகளுக்கு உரிமம் தரப்பட்டுள்ளது. 15 சதவித அளவிற்கே செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் ஹைட்ரோகார்பன்கள் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளது.

ஈ பி சி ஆயில் அண்ட் கேஸ் நிறுவனம் மற்றும் வி.டி. குருப் இணைந்து ரஷ்யாவில் உள்ள ஆறு தொகுதிகளில் எண்ணெய் நிறுவன ஒப்பந்தக்காரர் யு.டி.வி. உடன் இணைந்து எண்ணெய் தோண்டும் பணியில் ஈடுபருவார்கள். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் திட்டமிடுதல், நிதி மேலாண்மை, நிதி திரட்டுதல் போன்ற பணிகளில் இணைந்து செயல் படும்.

#TamilSchoolmychoice

சென்னையை சேர்ந்த வி.டி. குருப் நிறுவனம் ஏற்றுமதி, இறக்குமதி, தயாரிப்பு, மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் விவசாயம் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கர்நாடகா, பெல்லாரியில் வி.டி. குருப் நிறுவன தாது திட்டத்திற்கு மலேசியாவை சேர்ந்த ஈ பி சி ஆயில் அண்ட் கேஸ் நிறுவனம் 150 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி செய்ய உள்ளது.