Home நாடு மஇகா மகளிர் பகுதி : தலைவி பதவிக்கு உஷா நந்தினி – மோகனா முனியாண்டி போட்டி

மஇகா மகளிர் பகுதி : தலைவி பதவிக்கு உஷா நந்தினி – மோகனா முனியாண்டி போட்டி

599
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மஇகாவின் பல பதவிகளுக்கான தேர்தல்கள் தொடங்கியுள்ள நிலையில், மஇகா மகளிர் பகுதியின் தலைவிக்கான தேர்தலில் நடப்புத் தலைவி உஷா நந்தினியும், அந்தப் பிரிவின் முன்னாள் தலைவி மோகனா முனியாண்டியும் போட்டியிடவிருப்பது கட்சி வட்டாரங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மஇகா மகளிர் பகுதித் தலைவியாக 2018 வரை செயல்பட்ட மோகனா முனியாண்டி, மஇகா-தேசிய முன்னணி சார்பில் காப்பார் நாடாளுமன்றத் தொகுதியிலும் 2018 பொதுத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனாலும் அந்த முயற்சியில் தோல்வி கண்டார்.

அதன் பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார். அவருக்குப் பதிலாக ஒரு வழக்கறிஞரான உஷா நந்தினி மகளிர் பகுதித் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

மகளிர் பகுதித் தலைவிக்குப் போட்டியிடப் போவதாக மோகனா ஏற்கனவே அறிவித்திருந்தார்.

நேற்று புதன்கிழமை மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் உஷா நந்தினி தனது மகளிர் பகுதித் தலைவியைத் தற்காக்கப் போவதாக அறிவித்தார்.

தனது அணியில் போட்டியிடும் வேட்பாளர்களையும், மத்திய செயலவை உறுப்பினருக்கான மகளிர் பிரிவு வேட்பாளரையும் உஷா நந்தினி அறிவித்தார்.

நாளை வெள்ளிக்கிழமை மஇகா மகளிர் பகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது.

போட்டிகள் இருப்பின் அதற்கான வாக்களிப்பு எதிர்வரும் அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறும்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal